உங்களோட கான்செப்ட் என்னனே எங்களுக்கு புரியல. கோலியின் தேர்வால் குழம்பிய அணி – ரசிகர்கள் கேள்வி

Kohli

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் வரும் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.

eng

இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாரான போது இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று அறிவித்தார். ஆனால் இந்த தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் விளையாடுவார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியிருந்தார்.

ஆனால் கோலி என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை. நேற்று போட்டி துவங்கும் முன்னர் முதல் 2 போட்டிகளிலும் ரோகித் சர்மா ஓய்வு காரணமாக அணியில் இடம்பெறவில்லை என்றும் அதனால் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதல் போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணமாக ரோஹித் அணியில் இடம் பெறாதது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Rohith-4

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் தனது சிறப்பான தற்போது தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் ராகுல் விளையாடுவதே சரியாக இருக்கும் ஆனால் சமீப காலமாகவே பார்ம் இன்றி தவிக்கும் தவானுடன் ராகுலை இறக்கி கோலி பரிசோதனை நடத்தியது ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் நிபுணர்களிடம் விமர்சனங்களை பெற்றுள்ளன.

- Advertisement -

Rohith-2

இதுதான் அணியின் தோல்விக்கு காரணமாக பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த தொடருக்கு முன்னர் கூறியபடி ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் இந்த தொடரில் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் கோலி செய்த மாற்றம் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய வீரர்களாக வந்துள்ள மூவருக்கும் இந்த தொடரில் இடம் கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.