உலகக்கோப்பை தொடரில் பட்டையை கிளப்பிய அசத்தலான 5 இந்திய பவுலர்கள் – பட்டியல் இதோ

Shami-1
- Advertisement -

இந்திய அணி தற்போது வரை இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்றுள்ளது. ஒன்று இங்கிலாந்தில் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் தோனி தலைமையில் வெற்றி பெற்றது. இது போன்ற மிகப்பெரும் தொடர்களில் பந்து வீச்சாளர்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருக்கும் .1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ரோஜர் பின்னியும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஜாகீர் கானும் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்ல உதவியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 இந்திய பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்

- Advertisement -

kapildev

கபில்தேவ் – 28 :

1979 முதல் 1992 வரை 4 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார். மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்று இவர் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது தலைமையில்தான் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு முதன் முதலில் உலக கோப்பை தொடரை வென்றது.

- Advertisement -

அணில் கும்ளே – 31 :

இவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். மற்றும் உலக கோப்பை தொடர்களில் மற்றும் 18 போட்டிகளில் ஆடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியது அனில் கும்ப்ளே தான்.

- Advertisement -

Shami

முகமது சமி – 31 :

முஹமது ஷமி தோனியின் தலைமையில் உருவான ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். தற்போது வரை வெறும் 11 போட்டிகளில் மட்டுமே ஆடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முகமது சமி 2015 மற்றும் 2019 என இரண்டு உலக கோப்பை தொடர்களில் மட்டுமே தற்போது வரை விளையாடியுள்ளார்.

- Advertisement -

ஜவகல் ஸ்ரீநாத்- 44 :

இவர் மொத்தம் நான்கு கோப்பை போட்டிகளில் விளையாடி தொடர்களில் விளையாடி 34 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Zaheer-Khan

ஜாஹீர் கான் – 44 :

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக நீண்ட காலம் தாக்குப் பிடித்தவர். உலக கோப்பை தொடர்களில் 23 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜாஹீர் கான்.

Advertisement