இலங்கை 12 வருஷமா ஜெயிக்கலையாம். இந்த வருடமும் இந்தியா தான் ஜெயிக்குமாம் – வெளியான சுவாரசிய தகவல் இதோ

Ind
- Advertisement -

இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் போதும் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் நாளை மறுதினம் 5 ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 12 ஆண்டுகளாக இலங்கை அணி இந்தியாவை எந்த ஒரு தொடரிலிலும் வீழ்த்தியது இல்லை. அதாவது ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவத்திலும் சேர்த்து மொத்தம் 18 தொடர்களாக எந்த ஒரு தொடரிலும் இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தியது இல்லை என்று புள்ளிவிவரம் காட்டுகிறது.

அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு கும்ளே தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பின்னர் நடந்த 18 தொடர்களாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என அனைத்து தொடர்களையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதில் 5 டெஸ்ட் தொடரில் நான்கில் இந்தியாவும் ஒன்று டிராவும் ஆகியுள்ளது. 7 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஆறு டி20 தொடர்களில் இந்திய அணி 5 தொடர்களில் வெற்றியும், ஒரு தொடரை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ind

கடைசியாக நடைபெற்ற 18 தொடர்களில் 12 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வி இன்றி இலங்கை அணிக்கு எதிராக வெற்றியை கண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பலமிழந்த இலங்கை அணியில் ஒரே ஒரு வீரராக அந்த அணியின் கேப்டன் மலிங்கா பார்க்கப்படுகிறார். அதனைத்தவிர மற்ற அனைவரும் அனுபவமின்மை காரணமாக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருவதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இப்போது பிரகாசமாய் உள்ளது.

Kohli-2

மேலும் இலங்கை அணிக்கு எதிராக எப்போதும் இந்திய அணியின் கேப்டன் கோலி தனது சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை இலங்கை அணிக்கெதிராக 13 சதங்கள் மற்றும் 17 அரை சதங்கள் அடித்துள்ளார். எனவே இந்த டி20 தொடரில் கோலி அசத்தும் பட்சத்தில் எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெறும் என்று புள்ளி விவரங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement