ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த சாதனை – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று முடிந்தது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார்.

INDvsAUS

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவித்து. அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது. இறுதி நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் 97 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டுடன் இணைந்து புஜாராவும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதையடுத்த இணைந்த அஸ்வின், விகாரி ஜோடி தேனீர் இடைவெளிக்கு பின் வெற்றி பெற முடியாது என்றதால் விக்கெட்களை இழக்காமல் போட்டியை ட்ரா செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருக்கின்றனர்.

pant

இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் 131 ஓவர்கள் வரை விளையாடி சாதனை படைத்துள்ளது. 1980க்குப் பிறகு தற்போது தான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் 130 ஓவர்களுக்கு மேல் விளையாடி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளனர். இதில் ரோகித் சர்மா 98 பந்துகள், கில் 64 பந்துகள், புஜாரா 205 பந்துகள், விஹாரி 161 பந்துகள், அஸ்வின் 139 பந்துகள் எதிர் கொண்டு விளையாடி இருக்கின்றனர்.

ashwin 1

இதன்மூலம் 4வது இன்னிங்சில் 6 பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட பந்துகளை பிடித்து இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

Advertisement