32/3 டூ 119/4.. கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்.. தெ.ஆ அணியை மடக்கிய இந்தியா ஏ.. போராடி வெல்லுமா?

Rishabh Pant
- Advertisement -

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ கிரிக்கெட் அணி 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 30ஆம் தேதி பெங்களூருவில் உள்ள என்சிஏ மைதானத்தில் துவங்கியது. அதில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

கடைசியாக இங்கிலாந்து தொடரில் விளையாடிய அவர் முதல் போட்டியிலேயே 2 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்து அசத்தினார். துரதிஷ்டவசமாக 4வது போட்டியில் காலில் காயத்தை சந்தித்த அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது வலியையும் பொருட்படுத்தாமல் அவர் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்தது ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது.

- Advertisement -

ரிஷப் பண்ட் கம்பேக்:

பின்னர் அறுவைசிகிச்சை மேற்கொண்ட ரிஷப் பண்ட் தற்போது முழுமையாக குணமடைந்து இத்தொடரில் விளையாடுகிறார். அந்த சூழ்நிலையில் துவங்கிய முதல் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா ஏ அணி 309 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜுபாயர் ஹம்சா 66, ஜோர்டான் ஹெர்மன் 71, ரூபின் ஹெர்மன் 54, டியன் வான் வூரன் 46 ரன்கள் எடுத்தார்கள்.

இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக டானுஸ் கோட்டின் 4, குர்நூர் ப்ரார் 2, மாணவ் சுதர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய இந்தியா ஏ அணி தடுமாற்றமாக விளையாடி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 17 ரன்களில் அவுட்டானார். அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 32, ஆயுஸ் படோனி 38, ஆயுஷ் மாத்ரே 65 ரன்கள் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக பிரேனலன் சுப்ராயன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

அடுத்ததாக 75 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை அபாரமாக பந்து வீசிய இந்தியா ஏ அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அதிகபட்சமாக லேசெகோ செனோக்வனே, ஜூபாயர் ஹம்சா தலா 37 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக டானுஷ் கோட்டின் 4, அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 275 என்ற இலக்கைத் துரத்தும் இந்தியா ஏ அணிக்கு சாய் சுதர்சன் 12, ஆயுஷ் மாத்ரே 6, தேவ்தூத் படிக்கல் 5 ரன்களில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: பொருத்தமற்ற கில்லுக்காக மொத்த டீமையும் கெடுத்துட்டீங்க.. அவரை விட கில் சிறந்த டி20 பிளேயாரா? ஸ்ரீகாந்த் கேள்வி

அதனால் 32/3 என தடுமாறிய இந்தியா அணிக்கு ரிஷப் பண்ட் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அவருடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஜத் படிதார் 28 (87) ரன்களை அடித்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரிஷப் பண்ட் அரை சதத்தை கம்பேக் கொடுத்துள்ளார். அவருடைய நல்ல ஆட்டத்தால் 3வது நாள் முடிவில் 119/4 எடுத்துள்ள இந்தியா ஏ அணிக்கு கடைசி நாளில் வெற்றி பெற 156 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ரிஷப் பண்ட் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 64* (81), ஆயுஷ் படோனி 0* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement