412 ரன்ஸ் சேஸிங்.. துரத்தும் கேஎல் ராகுல், சுதர்சன்.. கடைசி நாளில் ஆஸியை இந்தியா ஏ த்ரில்லாக சாய்க்குமா?

IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி லக்னோவில் துவங்கியது. அங்குள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 420 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 74, சாம் கோன்ஸ்டஸ் 49, ஜேக் எட்வரஸ் 88, டோட் முர்பி 76 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக மாணவ் சுதர் 5, குர்நூர் ப்ரார் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

திருப்பி அடிக்கும் இந்தியா ஏ:

அடுத்து விளையாடிய இந்தியா ஏ அணி மோசமாக பேட்டிங் செய்து வெறும் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேஎல் ராகுல் 11, படிக்கல் 1, கேப்டன் துருவ் ஜுரேல் 1, நித்திஷ் ரெட்டி 1, ஆயுஸ் படோனி 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்து 75, ஜெகதீசன் 38 ரன்கள் குவித்தனர்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக டோட் முர்பி 2, ஹென்றி த்ரோன்டன் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 226 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணியை அபாரமாக பவுலிங் செய்த இந்தியா 185 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 85, பிலிப் 50 ரன்கள் எடுத்தனர். இந்தியா ஏ அணிக்கு முகமது சிராஜ் 2, யாஷ் தாகூர் 2, குர்நூர் ப்ரார் 3, மாணவ் சுதர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

- Advertisement -

சேசிங் செய்யுமா:

இறுதியில் 412 என்ற மெகா இலக்கைத் துரத்தும் இந்தியா ஏ அணிக்கு 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஜெகதீசன் 36 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் வந்த சாய் சுதர்சன் அவருடன் ஜோடி சேர்ந்து அசத்தினார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ராகுல் 74* ரன்கள் எடுத்த போது காயமடைந்து தற்காலிகமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார்.

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை சேர்த்தது ஏன்? விளக்கம் கொடுத்த – அஜித் அகார்கர்

அடுத்ததாக வந்த தேவ்தூத் படிக்கல் 5 ரன்களில் அவுட்டான போது முடிவுக்கு வந்த 3வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்தியா ஏ 169/2 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் சாய் சுதர்சன் 44*, மாணவ் சுதர் 1* ரன்களுடன் உள்ளனர். இன்னும் 8 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள இந்தியா ஏ வெற்றி பெற கடைசி நாளில் 243 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் இப்போட்டியில் இந்தியா திரில்லாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement