வைரங்களை தேடி தங்கத்தை தொலைக்கிறோம், டீம்ல என்ன நடக்குதுனே புரியல – 2023 உ.கோ பயணம் பற்றி கைஃப் வேதனை

Mohammad-Kaif
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. முன்னதாக உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வழுத்ததால் தேர்வுக்குழுவை அடியோடு நீக்கிய பிசிசிஐ குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டில் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலைகளை துவங்கியுள்ளது. இருப்பினும் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDia

- Advertisement -

அந்த உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் முதல் படியாக தற்போது நியூசிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பெரும்பாலான சீனியர்கள் ஓய்வெடுப்பதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதே போல அடுத்ததாக வங்கதேசத்தில் நடைபெறும் ஒருநாள் தொடர் உட்பட அடுத்த உலக கோப்பைக்கு முன்பு வரை நடைபெறும் தொடர்களில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

வைரத்தை தொலைக்கிறோம்:

அது போக ஏற்கனவே கடந்த ஒரு வருடமாக சோதனை முயற்சி என்ற பெயரில் கேப்டன் ரோகித் சர்மா – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த விதவிதமான சோதனைகள் மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சோதனைகள் நடைபெறும் நிலையில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் தற்போதைய நியூசிலாந்து தொடரில் இல்லாமல் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்து ஏற்கனவே செய்து தவறை செய்கிறார்கள். இந்நிலையில் தங்கமான இளம் வீரர்களை தேடித்தேடி தரமான அனுபவம் வாய்ந்த வைரத்தைப் போன்ற மூத்த வீரர்களை இந்தியா தொலைத்து வருவதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

INDia Hardik pandya

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் சராசரி வயது 31 என தெரிவிக்கும் அவர் இந்திய அணியில் முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். அது போக உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களுக்கும் தொடர்ச்சியான ஆதரவு கிடைப்பதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் சராசரி வயது 31 ஆகும். எனவே அனுபவம் மிக்க வீரர்கள் உங்களிடம் இருப்பது ஏதோ ஒரு வழியில் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்”

- Advertisement -

“மேலும் உலக கோப்பைக்கு தயாராக இந்தியா விரும்பினால் அதை இப்போது முதலே குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரிலிருந்தே தொடங்க வேண்டும். ஏனெனில் உலகக் கோப்பைக்கு முன்பாக உங்களுக்கு நிறைய ஒருநாள் போட்டிகள் கிடையாது. அதற்கு முன்பாக 25 போட்டிகள் இருக்கலாம். மேலும் நம்முடைய பவுலிங் தான் முதன்மை பிரச்சனையாக உள்ளது. அந்த இடத்தில் 2வது ஒருநாள் போட்டியில் விளையாடாத சார்துல் தாக்கூருக்கு பதில் முகமது சிராஜ் விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார். அதே போல் புவனேஸ்வர் குமார் ஏன் அணியில் இல்லை என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அவர் நல்ல பவுலராக இருந்தும் இத்தொடருக்கான அணியிலேயே இல்லை”

Kaif-and-Rohit-Dravid

“அந்த வகையில் புதிய வீரர்களை தேடி நாம் தரமான பழைய வீரர்களை இழக்கிறோம். சிலர் சொல்வது போல் வைரங்களை தேடி நாம் தங்கங்களை இழந்து வருகிறோம். உங்கள் அணியில் இருக்கும் வீரர்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தால் தாராளமாக தொடர்ந்து கொடுங்கள். உலக கோப்பைக்கு தயாராவதை இப்போதே தொடங்குங்கள் ஏனெனில் ஏற்கனவே நிறைய மாதங்கள் கடந்து விட்டதால் இதற்கு மேல் நேரமில்லை. இனியாவது தேவையான தகுந்த வீரர்களை தேர்வு செய்து தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்”

“மேலும் பும்ரா இல்லாத நேரத்தில் அதிகப்படியான வேகத்தைக் கொண்ட உம்ரான் மாலிக் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் அவர் டி20 உலக கோப்பையில் இல்லை. அர்ஷிதீப், புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோரும் கிட்டத்தட்ட அவருக்கு நிகராக வீசினாலும் அவர் அளவுக்கு 145+ வீசும் ஒருவர் இல்லாமல் உலக கோப்பையில் நாம் தடுமாறினோம். எனவே அடுத்து நடைபெறும் உலக கோப்பையிலாவது உம்ரான் மாலிக் விளையாட வைக்க இப்போதிலிருந்தே வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறினார்.

Advertisement