இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து வெளிநாட்டில் விளையாடும் போட்டிகளுக்காக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் தொடக்கமாக வரும் ஜூன் 27 மற்றும் 29 ஆம் தேதி ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 தொடர்களில் விளையாட உள்ளது இந்தியா.
அதன் பிறகு அடுத்த மாதம் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் , 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்ல விருக்கிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்றுள்ளார். ஆனால், இந்த தொடரில் விளையாட இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு அங்கே அணைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனரா என்று உறுதிப்படுத்தி கூறும் ‘recce ‘ எனப்படும் குழு இம்முறை இங்கிலாந்து செல்லவில்லை.
‘recce ‘ எனப்படுவது ஒவ்வொரு கிரிக்கெட் அணிகளிலும் இருக்கும் ஒரு குழுவாகும். இந்த குழு தங்கள் அணி வெளிநாடுகளில் விளையாட செல்லும் முன்னர், அவர்களுக்கு முன்னதாக சென்று அங்கே தங்கும் இடம், உணவு மற்ற இதர வசதிகள் அனைத்தும் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து அணி நிர்வாகத்திற்கு கூற வேண்டிய ஒரு பொறுப்புடைய குழு.
ஆனால், அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ள நிலையில் ,’recce ‘ குழு இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்துள்ளது. இதனால் வீரர்களுக்கு அங்கே போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று இன்னும் தெரியவில்லை. இதுபற்றி இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கேள்வி எழுப்பிய போது “இந்த கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் நான் அணியின் மேலாளர் மட்டும் தான். இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ” என்று கூறியதாக பிரபல மும்பை பத்திரிகையில் செய்திகள் வெளியாகி உள்ளது.