
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் குரூப் டி பிரிவில் 2வது இடத்தில் உள்ள அந்த அணி தங்களுடைய கடைசிப்போட்டியில் வென்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நல்ல நிலையில் இருக்கிறது.
முன்னதாக இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நட்சத்திர அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் சுமாராக விளையாடி வங்கதேசத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அப்போது நீங்கள் ஹைடன், கில்கிறிஸ்ட் கிடையாது என்பதால் ஒரு வங்கதேச வீரரை போல் உங்கள் தகுதிக்கு விளையாடுமாறு அவரை இந்திய ஜாம்பவான் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்தார்.
சேவாக்கிற்கு பதிலடி:
அத்துடன் டி20 கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்கு முன்பே உங்களுடைய காலம் முடிந்து விட்டதால் பேசாமல் ஓய்வு பெறுங்கள் என்றும் அவர் ஷாகிப்பை வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அந்த சூழ்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருது வென்றார். அப்போட்டியின் முடிவில் சேவாக் விமர்சனங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டனர்.
அதற்கு சேவாக் யார்? என்று ஷாகிப் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் சச்சின், ட்ராவிட் போல சேவாக் மரியாதை தெரியாதவர் என்று முன்னாள் வங்கதேச வீரர் இம்ருல் கைஸ் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஷாகிப் அல் ஹசன் கடினமாக உழைத்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ஷாகிப் அல் ஹசன் 1 – 2 வருடத்தில் உருவாகிவிடவில்லை. நீண்ட காலம் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஐசிசி நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக
இருக்கிறார். எனவே அவரைப் போன்ற வீரர் மரியாதையாக நடத்தப்பட வேண்டியவர். ஆனால் அதை வீரந்தேர் சேவாக் தம்முடைய கேரியரில் பெற்றதில்லை. அதனாலேயே மற்றவருக்கு மரியாதை கொடுப்பது பற்றி அவருக்கு தெரியாமல் இருக்கலாம்”
இதையும் படிங்க: 50 ஓவர் உலககோப்பை, ஐ.பி.எல் என அசத்திய விராட் கோலிக்கு இப்போ இப்படி ஒரு நிலையா? – ஏமாற்றத்தில் ரசிகர்கள்
“வங்கதேசம் மற்றும் அவருடைய கிரிக்கெட்டர்களை பற்றி சேவாக் இப்படி சொல்வது முதல் முறையல்ல. எனவே ஒரு முறை டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை எடுக்கும் திறமை வங்கதேசத்திடம் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். ஜாம்பவான் பேட்ஸ்மேனாக கருதப்படும் அவர் இது போன்ற கருத்துக்களை சொல்வதற்கு முன் என்ன நினைப்பார் என்பது எனக்கு தெரியவில்லை. சச்சின், டிராவிட் போன்ற மகத்தானவர்கள் எப்போதும் மற்ற வீரர்களை இப்படி தள்ளியதில்லை. ஏனெனில் அவர்களுக்கு வீரர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியும்” என்று கூறினார்.