ஐபிஎல் மூலமாக தமிழ் பரவுகிறது… மேலும் தமிழில் டிவீட் செய்த மற்றோரு சென்னை வீரர் – யார் தெரியுமா ?

tahir6
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளன. தற்போதிலிருந்தே ஐபிஎல் தொடருக்காக பல வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர்.

tahir

இந்திய கிரிக்கெட் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன்சிங் ஐபிஎல்-யில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட போது தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக ஹர்பஜன்சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் “வணக்கம் தமிழ்நாடு. இனிமேல் உங்ககூட கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோசம். உங்க மண்ணு இனி என்ன வைக்கணும் சிங்கமுன்னு” என்று டிவீட் செய்து அசத்தினார். அந்த டிவீட் தமிழர்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.அதைத்தொடர்ந்து ஹர்பஜன்சிங் டிவிட்டரில் தமிழில் பெரும்பாலும் டிவீட் செய்து வருகின்றார்.

- Advertisement -

அவரைத்தொடர்ந்து சமீபத்தில் சென்னை அணி ரசிகர் அதிகமாக விரும்பிடும் அதிரடி ஆட்டக்காரரும் ஆல்-ரவுண்டருமான சுரேஷ்ரெய்னாவும் தற்போது டிவிட்டரில் தானும்,முரளிவிஜயும் இருக்கும் படத்தை போட்டு தமிழில் டிவீட் செய்துள்ளார்.அந்த டிவீட்டும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

Tahir1

சென்னை அணிக்காக விளையாட தயாராக இருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் தொடர்ச்சியாக தமிழில் டிவீட் போட்டு சென்னை ரசிகர்களை மகிழ்வித்து வரும் வேளையில் தற்போது சென்னை அணிக்காக விளையாடவுள்ள வெளிநாட்டு வீரரான தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த இம்ரான் தாஹிரும் டிவிட்டரில் தமிழில் டிவீட் செய்து சென்னை ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இம்ரான் தாஹீர் தனது டிவீட்டில் “என் இனிய தமிழர்களே வணக்கம், நாளை சிங்கார சென்னைக்கு வந்துவிடுவேன், உங்களுடைய அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து வரும் உங்களின் அன்பு சகோதரன் நான், வர்றோம், தட்றோம், தூக்குறோம், எட்றா வண்டிய போட்றா வீசில” என்று தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

ஐபிஎல் தொடங்கும் முன்னரே சென்னை அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தமிழில் டிவீட் செய்து சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடங்குவதற்குள் இன்னும் சென்னை அணி வீரர்கள் யாரெல்லாம் தமிழில் டிவீட் போட்டு கலக்கப்போகின்றனர் என ஆவலாக தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement