ரோஹித் சர்மாவிற்கு அளித்ததுபோல் வாய்ப்புகளை எங்களுக்கு வழங்கவில்லை – பாக் வீரர் வருத்தம்

Imam-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007 ஆம் ஆண்டு அறிமுகமானவர் ரோஹித் சர்மா. அப்போது டி20 உலக கோப்பை தொடரில் ஓரளவிற்கு நன்றாக ஆடினார். ஆனால், அதன் பின்னர் அவரது திறமைக்காக தொடர்ச்சியாக இந்திய அணி வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருந்தது. ஆனாலும், பெரிதாக சாதிக்கவில்லை. கிட்டத்தட்ட 2012ஆம் ஆண்டு வரை அவர் சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு சாதனையையும் படைக்கவில்லை.

Imam 2

- Advertisement -

இருந்தாலும் இந்திய அணி அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பளித்தது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பங்கு மிகப் பெரியதாககும். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டிலிருந்து ரோகித் சர்மா படைத்த சாதனைகள் எல்லாம் வேறு லெவல். இதற்கு முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையே ஆகும்.

இந்நிலையில் இந்த நம்பிக்கை குறித்து பேசியுள்ளார் பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக் தனது கிரிக்கெட் வாரியத்தின் அவநம்பிக்கையை பற்றியும் பேசியுள்ளார் . இதுகுறித்து அவர் கூறுகையில் : எங்கள் வீரர்களிடம் எப்போதும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கிறது. அதாவது ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாவிட்டால் அணியிலிருந்து வெளியேற்றப்படுவோம்.

imam

இந்த பயம் எங்களது திறமையை பாதிக்கிறது. ஒரு சில போட்டிகளில் நன்றாக ஆடாவிட்டால் அவர்களை விட்டுவிடக்கூடாது. எங்களது கிரிக்கெட் வாரியத்திற்கும் எங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.இதுதான் எங்களிடம் உள்ள திறமையான வீரர்கள் சரியாமல் சரியாக ஆடாமல் போவதற்கான காரணமாக அமைகிறது.

- Advertisement -

வேறு எந்த ஒரு கிரிக்கெட் வாரியத்தில் இந்த நிலைமை இல்லை. இந்திய வீரர் ரோகித் சர்மாவை எடுத்துக்கொள்ளலாம். அவர் துவக்க காலத்தில் நன்றாக விளையாட வில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இப்போது அவர் அந்த வாய்ப்புகளை வைத்து ஒரு மிகப் பெரிய வீரராக வளர்ந்திருக்கிறார்.

imam 3

இது போன்று வாய்ப்புகள் எங்களுக்கும் வேண்டும் என்று மன வருத்தத்தை பதிவு செய்துள்ளார் இமாம்-உல்-ஹக். அவரின் இந்த பதிவிற்கு கலவையான விமர்சங்களும், கருத்துக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement