16வயது ஸ்பின்னரிடம் கற்றுக்கொள்ள போகிறேன் – அஸ்வின்.

aswin
- Advertisement -

11லது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது. கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் அஷ்வின் 7.6 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
ashwinm3

அக்சர் படேலை மட்டும் தக்கவைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அஸ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் ஆகிய முக்கிய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வின் தனது கேப்டன்சிப் பற்றி கூறுகையில் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பக்கம் ஆடிவிட்டேன், அதனால் கிங்ஸ் லெவன் அணியின் யுவராஜ் சிங் உள்ளிட்ட மூத்த வீரர்களுடன் அனுசரித்துப் போவது பெரிய விஷயமில்லை. நீங்கள் குறிப்பிட்ட பெரிய பெயர்கள் (யுவராஜ், கெய்ல், டேவிட் மில்லர், ஏரோன் பிஞ்ச்) ஆகியோர் ஒற்றுமையாக அணிக்காக பங்காற்றுவார்கள்.

mujed

பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படுவது என்னுடைய இயற்கையான ஒரு முன்னேற்றமாகவே பார்க்கிறேன், எனக்குள் ஒரு கேப்டன் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இந்த வாய்ப்பு உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது.

16 வயது ஆப்கான் இளம் ஸ்பின்னர் முஜீப் ஸத்ரான் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன், அவருடன் சேர்ந்து பந்து வீச காத்திருக்கின்றேன். அவரிடமிருந்து ஒன்றிரண்டு வித்தைகளைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய அந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்களே. ஆனால் இன்று என்னை நம்பி ஏலம் எடுத்த பஞ்சாப் என்னிடம் மொத்த அணியையுமே ஒப்படைத்துள்ளது.தமிழ்நாட்டு ரசிகர்கள் நான் எந்த அணியில் விளையாடினாலுமே எனக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement