ஐ.பி.எல் நடைபெறவில்லை என்றால் இவர்களுக்கு எல்லாம் சம்பளம் கிடையாதாம் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

auction-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் அனைவரது ஏகோபித்த வரவேற்புடன் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் இந்த ஆண்டு பதிமூன்றாவது சீசனாக கடந்த 29ஆம் தேதி தொடங்க இருந்தது.

Ipl cup

- Advertisement -

ஆனால் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தை ஆரம்பித்த நிலையில் தற்போது 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த தொடருக்கான ஐபிஎல் ஏலம் இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் முதன்முறையாக எடுக்கப்பட்ட வீரர்களுக்கு இந்த ஐ. பி.எல் தொடரை நடைபெறாமல் போனால் பெரும் இழப்புதான். ஏனெனில் ஐபிஎல் விதிமுறைப்படி போட்டிகள் தொடங்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக 15% சம்பளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும்.

IPL

பின்னர் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது 65% சம்பளம் வழங்க வேண்டும். அதன் பின்னர் தொடர் முடிந்த பின்னர் மீதமுள்ள சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் இந்த முறை எந்த விதத்திலும் இன்னும் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதற்குக்காரணம் கொரோனாவால் தொடர் தள்ளிப் போனதே இதற்கு காரணம்.

- Advertisement -

மேலும் இந்த முறை ஐபிஎல் போட்டி நடக்காமல் போனால் அது அறிமுக வீரர்களுக்கு தான் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அதேசமயம் கொரோனா பாதிப்பால் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்படும் போது சம்பளம் குறைப்பு என்பது உள்ளூர் வீரர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

IPL-1

இருந்தாலும் இதற்கு மாற்று வழி இருக்கிறதா ? என்று பி.சி.சி.ஐ ஆராய்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஐபிஎல் நடைபெறாமல் போனாலோ அல்லது போட்டிகள் குறைக்கப்பட்டு சிறிய அளவில் நடத்தப்பட்டாலும் இந்த சம்பள தொகையை கொடுப்பது கடினம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement