2020 உலகக்கோப்பைக்கு வருது டி-20 ஸ்பெஷல் ‘டிரெப்-20’ பந்து..! இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா..? – விவரம் உள்ளே

- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு விதி முறைகளும், புதிய யுத்திகலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வண்ணம் இருந்து வருகிறது. காலம் காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிகப்பு பந்தும், ஒரு நாள் போட்டிகளில் வெள்ளை பந்தும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் உலகில் புதிதாக அறிமுகமாகி உள்ளது “டிரெப்-20” பந்து.
ball
வரும் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெரும் உலக கோப்பை டி20 தொடரில் இந்த புதிய வகை பந்து பயன்படுத்தப்படும். இந்த பந்தை பிரபல கிரிக்கெட் பந்து தயாரிக்கும் நிறுவனமான ‘குக்கபுர நிறுவனம்’ தயாரித்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தை போலவே இந்த பந்து மிகவும் உறுதியாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புது வகை பந்தை குறித்து குக்கபுர நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கில் கூறுகயில்”டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள் 80 ஓவர்கள் வரை சேகத்தை தாங்க கூடிய அளவுக்கு கடினமாக இருக்கும். ஆனால், டி20 போட்டிகல் சற்று வித்தியாசமானவை. அதில் பயன்படுத்தபடும் பந்துகள் 20 ஓவர்கள் வரை நிலைத்து நின்றாள் போதும்.

- Advertisement -


தற்போது டி-20 கிரிக்கெட் அதிகரித்து வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என பாரம்பரிய பந்து தயாரிப்பது நடைமுறையில் உள்ளது போல டி-20 போட்டிக்கும் வேண்டும் என எங்கள் நிறுவனம் நினைத்தது. அதனால், “டிரெப்-20″ பந்தை தயாரித்தோம் ” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பந்தை 18 மாதங்கள் சோதனை செய்த பின்னரே தய்ராரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement