அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை. சைனிக்கு எச்சரிக்கை விடுத்த – ஐ.சி.சி

Saini-1
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக நவ்தீப் சைனி கலந்துகொண்டார்.

Saini

- Advertisement -

முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரை மெய்டனாக வீசி சாதனை படைத்தார். மேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அந்த ஆட்டத்தின் போது நான்காவது ஓவரில் பூரான் விக்கெட்டை வீழ்த்தினார்.

மேலும் விக்கெட் வீழ்த்திய பின்னர் அவரை ஆக்ரோஷமாக செய்கை செய்து வழியனுப்பி வைத்தார். இதனால் ஐசிசி விதிகளின்படி எதிரணியை வெறுப்பேற்றி அவர் மிக ஆக்ரோஷமாக வழியனுப்பியதற்காக ஆக்ரோஷமாக நடந்து கொண்ட சைனிக்கு தண்டனை அளிக்கும் விதமாக ஐசிசி அவருக்கு எச்சரிக்கையுடன் ஒரு தகுதி புள்ளி இழப்பு வழங்கியுள்ளது.

இரண்டு புள்ளிகள் சேர்ந்தால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒரு நாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement