பங்களாதேஷ் வீரர்கள் மட்டுமல்ல இவங்களும் தப்புக்கு காரணம். பகிரங்கமாக எச்சரித்த ஐ.சி.சி – விவரம் இதோ

- Advertisement -

19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணி மற்றும் இந்திய அணியும் மோதின. இதில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Ind-u-19

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் வெற்றி கொண்டாட்டத்தின் போது இரு அணி வீரர்களும் சற்று அநாகரீகமாக நடந்து கொண்டனர். மேலும் களத்தில் மோதிக்கொண்ட வீரர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து வங்கதேச அணி வீரர்களுக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை அளித்தது. மேலும் இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட தகவலில் வங்கதேச அணியை சேர்ந்த 3 வீரர்களையும் இந்திய அணியை சேர்ந்த 2 வீரர்களையும் எச்சரித்துள்ளது. அதன்படி வங்கதேச வீரர்களான முகமது தவ்ஹீத், ஷமீம் உசேன்,ரஹிபுல் அசன் ஆகியோரையும் இந்தியாவைச் சேர்ந்த ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங் ஆகியவையும் எச்சரித்து மன்னித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement