MS Dhoni : தோனிக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.சி.சி – காரணம் இதுதான்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார். இது சமூக

MSdhoni
- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அது யாதெனில் இது வழக்கமாக விக்கெட் கீப்பிங் செய்யும் தோனி தற்போது பயன்படுத்தி வரும் கிளவுஸ்களில் இந்திய பாராமிலிட்டரியின் சிறப்புப் படையின் முத்திரையான பாலிதான் என்பதனை பதித்து தனது விக்கெட் கீப்பிங் பிளவுசை பயன்படுத்தி வருகிறார்.

dhoni

ஏற்கனவே 2011ஆம் ஆண்டு தோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பாலிதான் முத்திரையை பயன்படுத்தி விளையாடி வருவதால் அவர் இந்திய ராணுவத்தின் மீது எவ்வளவு அக்கறை ஆக உள்ளார் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தோனியின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வரவேற்பினை பெற்றுவருகிறது.

- Advertisement -

தோனி ரசிகர்களின் பகிர்வால் இந்த செய்தி ஐசிசி வரை சென்றடைந்தது. இதனை கவனித்த ஐசிசி தோனிக்கு இனிமேல் அது போன்ற கிளவுஸை சர்வதேச போட்டிகளில் அணிந்து விளையாட கூடாது என்று அறிவுரை செய்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு நாட்டு வீரரும் அவர்களது நாட்டைச் சார்ந்த மதம், அரசியல் மற்றும் சமூகம் போன்றவற்றை குறிக்கும் குறியீடுகளை போட்டியின் போது உபயோகிக்கும் பொருட்களில் பயன்படுத்த கூடாது என்று ஒரு சட்டம் வகுத்துள்ளது.

icc

அதனால் இனிவரும் போட்டிகளில் தோனி அந்த கிளவுசை பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தோனியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த விடயத்தை பகிர்வது மட்டுமில்லாமல் தோனியிடம் இருந்து மிலிட்டரி குறியீடுகளை நீங்கள் எளிதாக நீக்கி விடலாம். ஆனால் தோனிக்கு மிலிட்டிரி மீது இருக்கும் காதலை எப்போதும் பிரிக்க முடியாது என்று பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement