டாப் 5-ல் இருந்து வெளியேறிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. முன்னேற்றம் கண்ட முகமது சிராஜ் – விவரம் இதோ

Jaiswal and Siraj
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வரும் வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

முன்னேற்றம் கண்ட முகமது சிராஜ்.. சரிவை சந்தித்த ஜெய்ஸ்வால் :

அந்த வகையில் வெளியான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் 5-லிருந்து வெளியேறி ஒரு சிறிய சறுக்களை சந்தித்துள்ளார். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது 54 பந்துகளை சந்தித்த அவர் 36 ரன்கள் மட்டுமே அடித்தார்.

- Advertisement -

இப்படி ஒரே ஒரு மோசமான இன்னிங்ஸ் காரணமாக தனது ஐந்தாவது இடத்தினை இழந்த அவர் இரண்டு இடங்கள் சரிந்து ஏழாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இருந்தாலும் எதிர்வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் அசத்தும் பட்சத்தில் மீண்டும் டாப் 5-ல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. கே.எல் ராகுலுடன் முதல் போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் அதனை பெரிய ரன்களாக மாற்ற தவறிவிட்டார்.

அதேவேளையில் ரவீந்திர ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியின் போது சிறப்பாக விளையாடி 104 ரன்கள் அடித்துள்ள வேளையில் ஆறு இடங்கள் முன்னேறி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 25-வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தொடர்ச்சியாக முதலிடத்தில் நீடிக்கிறார்.

- Advertisement -

அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் போது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் தனது முதல் இடத்தை காப்பாற்றிக்கொண்டார். அதேபோன்று மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகம்மது சிராஜ் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் அவர்தான் – அபிஷேக் நாயர் கணிப்பு

முகமது சிராஜை பொறுத்தவரை முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளையும் ,இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியதால் மூன்று இடங்கள் முன்னேறி 12-ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சிறந்த தரவரிசை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement