ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதலிரண்டு சூப்பர் 8 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவை தங்களுடைய கடைசி சூப்பர் 8 போட்டியில் இந்தியா சந்திக்கிறது. அதில் வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனல் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறும்.
ஆனால் ஆஸ்திரேலியா செமி ஃபைனல் செல்வதற்கு இப்போட்டியில் இந்தியாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா எப்போதுமே வலுவான ஜொலிக்கிறது. பொதுவாகவே நாக் அவுட் போன்ற அழுத்தமான சூழ்நிலைகளில் அசத்துவதில் ஆஸ்திரேலியா பெயர் பெற்ற அணியாகும்.
செயின்ட் லூசியா மைதானம்:
எனவே இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி செமி ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியா போராட உள்ளது. மறுபுறம் காலம் காலமாக ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாக திகழும் இந்தியா இம்முறை தோல்வியை சந்திக்காமல் நல்ல ஃபார்மில் இருக்கிறது. எனவே இப்போட்டியில் வென்று கடந்த ஐசிசி தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்ப இந்தியாவும் போராட உள்ளது.
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜூன் 24ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள செயின்ட் லூசியா நகரில் இருக்கும் டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அழகிய மலைத்தொடர்களுக்கு மத்தியில் 2002இல் தோற்றுவிக்கப்பட்டு 12000 ரசிகர்கள் அனைவரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 2010 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் இதுவரை நடைபெற்றுள்ள 23 டி20 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 11 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. இந்தியா இங்கே விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றியும் 2 தோல்வியும் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த வரலாற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 31 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 19 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா 11 வெற்றியும் பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
வெதர் ரிப்போர்ட்:
செயின்ட் லூசியா நகரில் போட்டி நாளன்று 20 – 30% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே லேசாக மழை குறுக்கீடு செய்தாலும் முடிவு கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
செயின்ட் லூசியா பிட்ச் மற்ற வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களை காட்டிலும் கொஞ்சம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. இங்கே நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி திறமையை காட்டும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். அதே சமயம் வேரியேஷன்களை காட்டும் பவுலர்களும் கண்டிப்பாக விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இதையும் படிங்க: கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் இதுதான் நடக்கும் – சிறுவயது பயிற்சியாளர் கருத்து
இங்கே அதிகபட்ச ஸ்கோரை (218/5) இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பதிவு செய்தது. இங்கு 2010இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் குறைந்தபட்ச (105) ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இங்கே சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 166. வரலாற்றில் இங்கே முதலில் பேட்டிங் செய்த அணிகளும் சேசிங் செய்த அணிகளும் ஏறத்தாழ சமமான வெற்றிகள் பெற்றுள்ளன. அதனால் டாஸ் வெல்லும் அணி எதை தேர்ந்தெடுத்தாலும் சிறப்பாக விளையாடுவது வெற்றிக்கு அவசியமாகிறது.



