ஐசிசி டி20 உ.கோ 2022 : பயிற்சி போட்டிகளின் முழுமையான அட்டவணை, எந்த சேனலில் பார்க்கலாம் – முழுவிவரம் இதோ

INDvsAUS
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்னதான் ஐபிஎல் போன்ற டி20 பிரீமியர் லீக் தொடர்கள் உலகம் முழுவதிலும் வந்தாலும் டி20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் அவை அனைத்துக்கும் முன்னோடியாக கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்தொடர் தற்போது வரலாற்றில் 8வது முறையாக நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ICC T20 World Cup

- Advertisement -

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அயர்லாந்து போன்ற 8 அணிகள் அக்டோபர் 16இல் துவங்கும் முதல் சுற்றில் போட்டியிடுகின்றன. அதில் 2 பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. அதை தொடர்ந்து அக்டோபர் 22இல் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியுடன் துவங்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்னில் நடைபெறுகிறது.

பயிற்சி போட்டிகள்:
அதன்பின் சூப்பர் 12 சுற்றின் 2 பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் தலா 2 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அதில் வெற்றி பெறும் 2 அணிகள் நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்படி திருவிழாவாக நடைபெறப் போகும் இந்த தொடரில் இந்தியா போன்ற வெளிநாட்டு அணிகள் ஆஸ்திரேலிய கால சூழ்நிலைகளுக்கு உட்படுத்தி கொண்டு சிறப்பாக செயல்படும் வகையில் உலகக் கோப்பைக்கு முன்பாக அனைத்து அணிகளும் குறைந்தது 1 பயிற்சி போட்டியில் விளையாட ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது.

INDIA Arshdeep Singh Harshal Patel

அதில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலும் நியூசிலாந்துக்கு எதிராகவும் 2 பயிற்சி போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. ஐசிசி வெளியிட்டுள்ள பயிற்சி போட்டி அட்டவணை இதோ (இந்திய நேரப்படி):
திங்கள்கிழமை, அக்டோபர் 10:
வெஸ்ட் இண்டீஸ் V அமீரகம், காலை 5.30, மெல்போர்ன், மெல்போர்ன் (ஜங்சன் ஓவல்)
ஸ்காட்லாந்து V நெதர்லாந்து, காலை 9.30, மெல்போர்ன் (ஜங்க்சன் ஓவல்)
செவ்வாய்க்கிழமை அக்டோபர் 11:
இலங்கை V ஜிம்பாப்வே, காலை 9.00, மெல்போர்ன் (எம்சிஜி)
நமீபியா V அயர்லாந்து, மதியம் 1.30, மெல்போர்ன் (எம்சிஜி)
புதன்கிழமை, அக்டோபர் 12:
வெஸ்ட் இண்டீஸ் V நெதர்லாந்து, மதியம் 1.30, மெல்போர்ன் (எம்சிஜி)
வியாழக்கிழமை, அக்டோபர் 13:
ஜிம்பாவே V நமீபியா, காலை 5.30, மெல்போர்ன் (ஜங்க்சன் ஓவல்)
இலங்கை V அயர்லாந்து, காலை 9.30, மெல்போர்ன் (ஜங்க்சன் ஓவல்)
ஸ்காட்லாந்து V அமீரகம், மதியம் 1.30, மெல்போர்ன் (எம்சிஜி)

- Advertisement -

INDvsAUS

திங்கள்கிழமை, அக்டோபர் 17:
ஆஸ்திரேலியா V இந்தியா, காலை 9.30, பிரிஸ்பேன் (காபா)
நியூசிலாந்து V தென்னாப்பிரிக்கா, காலை 9.30, பிரிஸ்பேன், பிரிஸ்பேன் (ஆலன் பார்டர் பீல்டு)
இங்கிலாந்து V பாகிஸ்தான், மதியம் 1.30, பிரிஸ்பேன் (காபா)
ஆப்கானிஸ்தான் V வங்கதேசம், மதியம் 1.30, பிரிஸ்பேன் (ஆலன் பார்டர் பீல்டு)
புதன்கிழமை, அக்டோபர் 19:
ஆப்கானிஸ்தான் V பாகிஸ்தான், காலை 8.30, பிரிஸ்பேன் (காபா)
வங்கதேசம் V தென்ஆப்பிரிக்கா, மதியம் 1.30, பிரிஸ்பேன் (ஆலன் பார்டர் பீல்டு)
நியூஸிலாந்து V இந்தியா, மதியம் 1.30, பிரிஸ்பேன் (காபா)

எதில் பார்க்கலாம்:
இந்த பயிற்சி போட்டிகளை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் அதிலும் குறிப்பாக இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.

iplstar

சிறப்பு போட்டிகள்:
இது போக இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலிய பறந்துள்ள இந்தியா தற்போது உலகப் புகழ்பெற்ற வாக்கா (WACA) கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சிகளை துவங்கியுள்ளது. அங்கு உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளுக்கு முன்பாகவே வரும் அக்டோபர் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2 பயிற்சி போட்டிகளில் களமிறங்குகிறது. இருப்பினும் அப்போட்டிகளை நேரடியாக தொலைகாட்சியில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement