தோனியை கேப்டன் கூல் என்று அழைக்க இதுவே காரணம் – தோனியின் 40 ஆவது பிறந்தநாளில் ஐ.சி.சி வெளியிட்ட வீடியோ

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனி 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடியதைத் தொடர்ந்து அதற்கு அடுத்து எப்போது விளையாடுவார் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்த வேளையில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திடீரென தனது ஓய்வு முடிவை வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்றார்.

Dhoni

- Advertisement -

அதன் பின்னர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது 40வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் தோனிக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் இவ்வேளையில் ஐசிசி தோனியை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கேப்டன் கூல் என தோனியை அழைப்பதற்கு இதுதான் காரணம் என்று அவர் எடுத்த சில அற்புதமான முடிவுகளை கொண்ட தொகுப்புகளை 4.45 நிமிடம் கொண்டு வீடியோவாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்குமேல் விளையாடிய தோனி ஐசிசி நடத்திய மூன்று வகையான தொடர்களின் உலக கோப்பையையும் பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள தோனிக்கு நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கொள்வோம்.

Advertisement