நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்க முடியாது. கங்குலிக்கு நோஸ் கட் கொடுத்த ஐ.சி.சி – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

அடுத்த மார்ச் மாதம் ஐசிசி உறுப்பினர்களின் முக்கிய உயர்மட்ட கூட்டமான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்த கூட்டம் 27ம் தேதி முதல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக 2023 முதல் 2031 வரை நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் குறித்த கூட்டம் நடைபெற இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Ganguly

- Advertisement -

இந்த கூட்டத்தில் 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்க பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடர் 29ம் தேதி துவங்க உள்ளதால் பிசிசிஐ தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் சற்று குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் இந்தியாவில் ஐ.பி.எல் தொடரின் துவக்க போட்டியில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதனால் இந்த ஐசிசி கூட்டத்தை தள்ளி வைக்குமாறு பிசிசிஐ சார்பில் கங்குலி தரப்பில் ஐ.சி.சி-க்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ இந்த வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Ipl cup

ஏனெனில் கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால் பயணம் மற்றும் தங்குமிடம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக எந்த காரணத்திற்காகவும் கூட்டத்திற்கான தேதியை மாற்ற முடியாது என்று ஐசிசி கண்டிப்பாக தெரிவித்துவிட்டது. இதனால் பிசிசிஐ தலைவர் மற்றும் நிர்வாகிகள் நிச்சயம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement