அம்பயர் மேலயே கோவத்தை காமிக்கிறீங்களா? ரிஷப் பண்டை கண்டித்த ஐ.சி.சி – என்ன நடந்தது?

Rishabh Pant (1)
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் வெற்றிக்காக போராடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக 3 அனுபவ வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாடுகின்றது.

ரிஷப் பண்டை கண்டித்த ஐ.சி.சி :

இதன் காரணமாக புதிய இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் எவ்வாறு செயல்படப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 471 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 366 ரன்களையும் குவித்து அசத்தியது.

- Advertisement -

இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணி சார்பாக மொத்தம் 5 சதங்கள் விளாசப்பட்டன. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் சதங்களையும், ஜெய்ஸ்வால், கில், கே.எல் ராகுல் ஆகியோர் தலா ஒரு சதத்தையும் விளாசினர். பின்னர் 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றது.

இவ்வேளையில் இந்த போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டிற்கு ஐசிசி கண்டனம் விதித்துள்ளதோடு ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் வழங்கி உள்ளது. ஏனெனில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் இந்திய அணி பந்துவீசுகையில் பந்தில் சேதம் இருப்பதாக கூறி பந்தினை மாற்றுமாறு ரிஷப் பண்ட் அம்பயரிடம் முறையிட்டார்.

- Advertisement -

ஆனால் அம்பயர் பந்தில் உள்ள சேதாரங்களை சுட்டிக்காட்டி தற்போதைக்கு பந்தை மாற்ற முடியாது என்ற ரிஷப் பண்டிடம் கூறினார். ஆனால் அம்பயரின் கருத்தை ஏற்காத பண்ட் அந்த பந்தை அவரிடம் இருந்து வாங்கி சற்று கோபமாக தூக்கி எறிந்தார். அந்த பந்து அம்பயரின் மீது படவில்லை என்றாலும் அப்பயரின் முடிவுக்கு எதிராக ஒரு செயலை செய்வது போன்று இருந்ததால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படிங்க : ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சங்ககாராவின் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

இந்நிலையில் அவரது இந்த செயலை பரிசோதித்த ஐசிசி-யும் அம்பயரின் முடிவுக்கு எதிராக பண்ட் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியை வழங்கியுள்ளது. தனது குற்றத்தை ரிஷப் பண்டும் ஒப்புக்கொண்டதால் அவர் அபராதத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement