ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து ரத்தாக இருக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் – ரசிகர்கள் வருத்தம்

Cup
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்படும், தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உலகின் மிகப்பெரிய தொடரான ஒலிம்பிக் போட்டிகளும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவிருந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரும் கடந்த மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15 ஒத்தி வைக்கப்பட்டு அதன் பிறகு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்து கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்து எப்போது கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் நடக்கும் என்பதற்கான சாத்தியங்கள் தற்போது குறைவாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மேலும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதன் படி அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து வெளியான ஐசிசியின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலின்படி : கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது உலகமே இருண்டு அதே சூழ்நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் உடல் நலமே தற்போதைக்கு முக்கியம் என்பதால் டி20 உலக கோப்பை குறித்து எந்த ஒரு நிலையான முடிவையும் எங்களால் சொல்ல முடியாது. போட்டிகள் தொடங்க சில மாதங்கள் இருப்பதினால் நிலைமை எவ்வாறு இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் இந்த சூழ்நிலை தொடரும்.

Cup

ஆகஸ்டு இறுதியில் இது குறித்து ஐசிசி கூட்டத்தினை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்றும் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதில் தான் நாங்கள் முழு வீச்சு செயல்படுகிறோம். அதற்கு உண்டான வேலைகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement