கொரோனா எதிரொலி : ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து தள்ளிப்போக இருக்கும் ஐ.சி.சி யின் முக்கிய தொடர் – விவரம் இதோ

ind-2

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு துவங்கியது. இந்த தொடரில் இதுவரை அனைத்து அணிகளும் பங்கேற்று விளையாட துவங்கிவிட்டன. இதுவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியே முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த தொடர் 2021ம் ஆண்டு வரை நடக்க உள்ளது.

Ind-lose

ஒவ்வொரு அணியும் மற்ற அணிக்கு எதிராக உள்ளூரிலும் வெளிநாட்டு தொடர்களில் விளையாடும். அதன்பிறகு புள்ளிப்பட்டியளில் 2021ஆம் ஆண்டு எந்த அணிகள் முதல் 2 இடம் பிடிக்கிறதோ அந்த அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இறுதிப்போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2010ம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்று மோதி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது..

Ind-1

இந்நிலையில், சர்வதேச அளவில் பரவி வரும் கரோனா வைரஸ் அதிபயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரசின் தாக்கம் காரணமாக டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர், ஐபிஎல் தொடர் மற்றும் உலகின் மற்ற விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயல்பு நிலை திரும்பும் வரை கிரிக்கெட் போட்டிகள் நடப்பது சந்தேகம் என்றே தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் இறுதிப் போட்டியையும் தள்ளி வைக்கப் போவதாக தெரிகிறது. இது ஒரு ஐசிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது : தற்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்த அனைத்து மாற்று வழிகளையும் யோசித்து வருகிறோம். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Ind vs Rsa

இருப்பினும் குறிப்பிட்ட அளவு போட்டிகளை நடத்தினால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை நடத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இறுதிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அதிகாபூர்வமற்ற செய்திகளும் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -