கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம் – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு

ICC
- Advertisement -

சர்வதேச அளவில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளும் பெரிய சிக்கலை சந்தித்து உள்ளது. மேலும் இந்தியாவும் இதில் பெரிய பாதிப்பை அடைந்துள்ள நிலையில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு துறையை சேர்ந்த நிர்வாகங்களும் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஐசிசியின் தலைமையில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட வாய்ப்பு இல்லாமல் உள்ளது.

Ind-lose

- Advertisement -

தற்போது கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக எதிர்கால போட்டிகளை நடத்தும் அட்டவணையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஐசிசி நடத்திய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அட்டவணையை மாற்றியமைக்க ஐசிசி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

அதன் நிர்வாகிகள் குழு கூட்டம் டெலி கான்பிரன்சிங் மூலம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ள ஒரு நாள் கிரிக்கெட் லீக் மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ind-2

இதுகுறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த வரும் 2023 ஆம் ஆண்டு வரை உள்ள அட்டவணைகளை நாங்கள் மாற்றி அமைக்க பரிசீலனை செய்து வருகிறோம். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அதில் ஐசிசி தரப்பில் குறிப்பிட பட்டுள்ளது.

Cup

ஏற்கனவே இலங்கை – இங்கிலாந்து தொடர், நியூசிலாந்து – ஆஸ்திரேலியா தொடர், இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர், பாகிஸ்தான் தொடர் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் அக்டோபர் மாதம் துவங்க உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரும் நடப்பது கேள்விக்குறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement