இந்திய அணி அரையிறுதிக்கு போகனும்னே பிளான் போட்டு வேலை பாத்து இருக்காங்க – வெளியான குற்றச்சாட்டு

IND
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா நாட்டில் துவங்கியது. முதல் முறையாக அமெரிக்க நாட்டில் இந்த தொடரானது நடைபெற்று வருவதால் தற்போது அமெரிக்க நாட்டிலும் கிரிக்கெட் பரவ ஆரம்பித்துள்ளது. அதோடு இந்த விடயம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கிரிக்கெட் வளர வேண்டும் என்பதற்காகவே சில முக்கிய முடிவுகளை ஐசிசி எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

அதிலும் குறிப்பாக உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட அணி இந்தியா தான் என்பதற்காக இந்தியா அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து ஐசிசி அவர்களுக்கு சாதகமாக அட்டவணை வகுத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி :

- Advertisement -

அயர்லாந்து, கனடா, பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளுடன் மோதுமாறு அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அவர்கள் விளையாடும் மைதானம் என்ன என்பது குறித்தும் முன்கூட்டியே திட்டமிட்டு ஐசிசி வேலை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இரவு 8 மணிக்கு தான் நடைபெறுமாறு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு செல்லும்போது எந்தெந்த மைதானத்தில் விளையாடுமோ அந்தந்த மைதானங்களில் எல்லாம் போட்டி 8 மணிக்கு தான் துவங்குகிறது.

- Advertisement -

அதோடு இந்திய அணி அரையிறுதி போட்டியில் விளையாடும் நாள் அன்று ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு அரையிறுதி போட்டியில் ரிசர்வ் டே வழங்கப்படவில்லை. அதோடு அந்த போட்டியின் நேரம் காலை 6 மணிக்கு துவங்குகிறது. இப்படி இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு சரியாக துவங்குமாறு அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை பைனலுக்கு அந்த டீம் மட்டும் வந்துடவே கூடாது. அப்புறம் இந்தியாவுக்கு தான் கஷ்டம் – யுவ்ராஜ் சிங் கருத்து

அதோடு இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளருடன் சென்றுள்ள வேளையில் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெறுமாறும் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி மறைமுகமாக இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்கள், நேரம் என அனைத்தும் முன்கூட்டியே ஐசிசி யோசித்து செய்துள்ளதால் இந்திய அணிக்கு சாதகமாக ஐ.சி.சி நடந்து கொள்கிறதோ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement