- Advertisement -
ஆசிய கோப்பை

ட்வீட்டை டெலீட் செய்த பாகிஸ்தான் தலைவர்.. இந்தியா மீதான புகாரில் ஐசிசி வழங்கிய தீர்ப்பு என்ன?

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி தங்களுடைய 2வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இருப்பினும் அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது.

சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து தக்க பதிலடி கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக தங்களுடைய எதிர்ப்பை காட்ட விரும்பிய இந்திய அணி போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்காமல் வெளியேறியது.

- Advertisement -

ஐசிசி வழங்கிய தீர்ப்பு:

அத்துடன் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கை கொடுக்கவில்லை. அதனால் அதிருப்தியடைந்த சல்மான் ஆகா போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் ஜென்டில்மேனாக கை கொடுக்காமல் சென்ற இந்திய அணியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இறுதியில் விளையாட்டுணர்வுக்கு எதிராக நடந்து கொண்ட இந்தியா மீது பாகிஸ்தான் வாரியம் ஐசிசியிடம் புகார் செய்தது. மேலும் டாஸ் வீசுவதற்கு முன்பாக கை கொடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இரு அணி கேப்டன்களிடம் போட்டியின் நடுவர் ஆண்டி ஃபைக்ராப்ட் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் வாரியம் குற்றம் சாட்டியது. எனவே அவரை ஆசியக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டுமென ஐசிசியிடம் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

டெலீட் செய்த பாகிஸ்தான்:

இந்நிலையில் இந்தியா மீதான பாகிஸ்தானின் புகாரை நிராகரிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதைப் பற்றி விசாரித்த ஐசிசி குழு டாஸ் நிகழ்வுக்கு முன் கை கொடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நடுவர் ஆண்டி ஃபைக்ராப்ட் தனிப்பட்ட முறையில் இரு அணிகளின் கேப்டன்களைக் கேட்டுக் கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் போட்டி முடிந்த பின் கை கொடுப்பது கட்டாயம் என்று எம்சிசி விதிமுறைகளில் சொல்லப்படவில்லை.

இதையும் படிங்க: அவரை தூக்கலன்னா ஆசியக் கோப்பை விட்டு பாகிஸ்தான் வெளியேறும்.. ஐசிசியிடம் பாக் தலைவர் புகார்

எனவே இந்திய அணி மீதான பாகிஸ்தான் புகார்களை ஐசிசி நிராகரித்துள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன் காரணமாக ஆண்டி பைஃகிராப்ட் அவர்கள் மேலே கொடுத்த புகார் பற்றிய விவரப் பதிவை ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் நக்வி (டெலீட்) நீக்கியுள்ளார். அதனால் இந்த விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிராக வெற்றி காண முடியாமல் பாகிஸ்தான் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -