உலகக்கோப்பையில் சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி ரூல்ஸ் நீக்கம் – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு

- Advertisement -

இந்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதியோடு முடிவடைந்து. இந்த தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றாலும் அந்த இறுதிப் போட்டியின் முடிவு குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டன.

Eng-1

ஏனெனில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் இருஅணிகளும் 241 ரன்கள் குவிக்க போட்டி சமனில் முடிந்தது. இதனை அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் இந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது என அம்பயர்கள் அறிவித்தார்கள்.

- Advertisement -

இந்த முடிவை பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் கிரிக்கெட் விமர்சகர்கள் இந்த முடிவு குறித்து அதிகமாக விமர்சித்தனர். இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல் ஐசிசி தொடர்களில் போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். சூப்பர் ஓவரிலும் ஒரே ஸ்கோர் எடுக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு முறை சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளது.

England

மேலும் இந்த புதிய விதிகள் இனிவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அமல்படுத்தப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement