2019 ஆண்டின் கடைசி ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு – முழுவிவரம் இதோ

Ind-1

ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2019 ஆம் ஆண்டின் கடைசி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியாகியது. அதன்படி வெளியான இந்த தர வரிசை பட்டியலில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஸ்மித்தை மீண்டும் தாண்டி முதலிடத்தில் நீடித்துள்ளார்.

Ind

அதன்படி கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஸ்மித் 911 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 822 புள்ளிகளுடன் உள்ளார். மேலும் இந்திய அணி வீரரான புஜாரா நான்காவது இடத்திலும், ரஹானே ஆறாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைப் போன்றே பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், நியூசிலாந்து வீரர் வாக்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களான பும்ரா, அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் முதல் 10 இடத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இடத்திலும், அஸ்வின் ஐந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு துவங்கிய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 320 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -