இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த இருக்கும் ஐ.சி.சி – விவரம் இதோ

Umpire
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்தது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Cup

- Advertisement -

டிசம்பர் 6 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் ஐசிசி கொண்டு வந்த ஒரு புதிய விதி முறையை நடைமுறைப்படுத்த உள்ளனர். அதன்படி அம்பயர்களின் கவனக்குறைவால் ஏற்படும் நோபால் பிரச்சனைகளை ஐபிஎல் போட்டிகளின்போது நிறையவே பார்த்தோம். அந்த நோபால்களின் மூலம் ஆட்டத்தின் முடிவு மாறியது நாம் கண்கூடாக பார்த்தது.

எனவே மூன்றாவது அம்பயரின் மூலம் நோபாலை கவனிக்கும் விதிமுறையை ஐசிசி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி முதன் முறையாக இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 20 மற்றும் ஒருநாள் தொடர்களில் டிவி அம்பயர்களின் மூலம் சோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Umpire

ஐசிசியின் இந்த புதிய விதிமுறையை இந்திய தொடரில் பரிசோதனையாக செயல்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. எனவே இனி போட்டியின் போது சிக்கலான நோபால் [பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிகிறது.

Advertisement