போட்டியின் போது ஒரு வீரருக்கு கொரோனா ஏற்பட்டால் ? ஐ.சி.சி போட்ட புது ரூல்ஸ் – விவரம் இதோ

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் லெவனில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர் ஒருவருக்கு அடிபட்டு விளையாட முடியாதபடி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அவரால் மீண்டும் களத்திற்குள் வரமுடியாது என்று அறிவிக்கப்பட்டு அந்த அணி 10 பேருடன் தான் விளையாடும். அதன் பின்னர் சென்ற வருடம் முதன் முதலாக ஒரு வீரருக்கு அடிபட்டு விட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை வைத்து விளையாடலாம் என்ற விதி கொண்டு வரப்பட்டது.

Dhawan 1

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் இந்த விதி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முதலாக ஸ்டீவன் ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போது காயம் காரணமாக வெளியேற அவருக்குப் பதிலாக மார்னஸ் லபுஷானே வந்து விளையாடினார், இந்நிலையில் இதேபோல் ஒரு விதி மீண்டும் ஒரு முறை கொரோனா வைரஸ் தொடர்பாக பயன்படுத்தப்பட உள்ளது.

ஒருவேளை விளையாடிக்கொண்டிருக்கும் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் வெளியேற நேர்ந்தால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை வைத்துக்கொள்ள ஐசிசி அனுமதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முறையீட்டு இருந்தது.இந்த வேண்டுதலை இன்று ஐசிசி எற்று ஒப்புதல் அளித்தது.

icc

கொரோனா வைரஸ் காரணமாக வீரர் வெளியேறிவிட்டால் அவருக்கு பதிலாக ஒரு வீரரை களமிறக்ககலாம் என்று ஐசிசிஅறிவித்துள்ளது இதன் காரணமாக மொத்தம் 13 பேர் அணியின் பெயர் அட்டவணையில் இடம் பெறுவார்கள். ஒன்று காயம் காரணமாக வெளியேறும் வீரர் ,மற்றொன்று கரோனா வைரஸ் காரணமாக வெளியேறும் வீரர்.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது இந்த விதி முதன்முதலாக அறிமுகப் படுத்தப்படுகிறது. கொரோனா ஏற்படுத்திய இந்த பாதிப்பு காரணமாக ஐ.சி.சி பல புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே பந்தில் எச்சில் பயன்படுத்தக்கூடாது என்ற விதிக்கு வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனம் உண்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

wivseng 1

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு ஏற்படும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்தும் இந்த விதிமுறை குறித்தும் விமர்சனங்கள் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement