அம்பயருக்கு எதிராகவும் தனது வேலையை காட்டிய ஆஸி கேப்டன் டிம் பெயின் – அதிரடி காட்டிய ஐ.சி.சி

Paine

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரித்தான பாணியில் கடைசி ஓவரின் போது போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் போது 407 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

INDvsAUS

ஆனால் அதனை தகர்க்கும் வகையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி போட்டியை டிராவில் முடித்தன. குறிப்பாக இந்த போட்டியில் இறுதி வரை களத்தில் நின்று டிரா செய்த ஜோடியான விஹாரி மற்றும் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தாலும் இந்த போட்டியில் இனவெறி தூண்டும் வகையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் செய்த செயல், இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்ட தொடர் காயம் என பல்வேறு விடயங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன.

அந்த வகையில் தற்போது இந்த பரபரப்பை அதிகரிக்கும் வகையில் மற்றொரு செய்தியாக ஆஸ்திரேலிய கேப்டனுக்கு ஐசிசி அபராதம் விதித்தது மட்டுமின்றி ஒரு தகுதியிழப்பு புள்ளியையும் வழங்கியுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. இந்த முதல் இன்னிங்சின் போது 55 ஆவது ஓவரில் புஜாராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியது.

paine 1

ஆனால் 3-வது நடுவர் அதற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கடும் அதிர்ப்தியடைந்த டிம் பெயின் நேராக அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் செய்த இந்த செயல்பாடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவர்கள் முடிவுக்கு எதிர்த்து கருத்து வேறுபாட்டை காட்டுவது போல் இருந்ததால் நன்னடத்தை காரணமாக அவர் மீது களத்தில் இருந்த அம்பயர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

paine 2

அந்தப் புகாரை டிம் பெயின் ஒப்புக்கொண்டு தண்டனை ஏற்றுக்கொள்வதாக ஒத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு போட்டியிலிருந்து 15 சதவீத சம்பளம் அபராதம் விதிப்பதாகவும் மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் போட்டியின் நடுவர் டேவிட் பூன் வழங்கினார். தவறை ஏற்றுக் கொண்டதால் இதுக்கு மேல் விசாரணை தேவையில்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.