WTC Final : ரிசர்வ் டே 6 ஆவது நாள் ஆட்டம் எவ்வாறு நடக்கும் – ஐ.சி.சி கொடுத்த விளக்கம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்
- Advertisement -

ஐசிசி நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி பற்றிதான் அதிகம் பேசப்பட்டு வந்தது. மேலும் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருந்தது.

kohli

- Advertisement -

இந்நிலையில் நேற்று 18ஆம் தேதி துவங்க இருந்த இந்த ஆட்டம் முதல் நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இந்த போட்டி சரியான நேரத்தில் நடைபெற்று முடியுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இந்த போட்டிக்கு முன்பாகவே ஐசிசி அறிவித்திருந்த விதிமுறைகளில் போட்டி ஒருவேளை மழையால் பாதிக்கப்பட்டாலோ, வானிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டாலோ ரிசர்வ் டே நடக்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த ரிசர்வே எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதனை நாங்கள் உங்களுக்காக இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ரிசர்வ் டே போட்டியானது முதலிலேயே நடக்கும் என உறுதியாகக் கூறிவிட முடியாது. போட்டியின் கடைசி நாளில் தான் அது முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

mazhai

டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக ஒரு நாளைக்கு சராசரியாக 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். ஆனால் போட்டி மோசமான வானிலை மற்றும் மழையின் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் அடுத்தடுத்த நாட்களில் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டு அதிகமாக ஓவர்கள் வீசப்படும். உதாரணமாக ஒரு நாள் ஒன்றுக்கு 90 ஓவர்கள் வீசப்படும். ஆனால் முதல் நாள் முழுவதும் போட்டி நடைபெறாததால் மீதமுள்ள 4 நாட்களும் 105 ஓவர்கள் வரை வீசப்படும். இப்படி 105 ஓவர்கள் வீசப்பட்ட ஆளும் மீதம் 30 ஓவர்கள் பாக்கி இருக்கும்.

அப்போது கடைசி நாளில் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இந்த ரிசர்வ் டே நடத்தப்படும். இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டமும் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 15 ஓவர்கள் அதிகமாக வீசப்படும். அப்படி வீசினாலும் 4 நாட்களில் 60 ஓவர்கள் வரை மட்டுமே வீசமுடியும் என்பதால் நிச்சயம் 5 நாட்களில் போட்டி முடிவடைய வாய்ப்பில்லை. இதன்காரணமாக ஆறாவது நாளில் போட்டியின் முடிவுக்காக நிச்சயம் ரிசர்வ் டே போட்டி நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement