இந்திய அம்பயரால் கிராமத்திற்கு கிடைத்த செல்போன் நெட்வொர்க் சேவை – பாராட்டுகளை குவிக்கும் செயல்

Anil-2
- Advertisement -

ஐசிசி எலைட் பேனலில் நடுவராக இருப்பவர் அனில் சவுத்திரி. இவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கும், சர்வதேச போட்டிகளுக்கும் பி.சி.சி.ஐ சார்பாக நடுவராக இருந்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா மார்ச் 23 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல் படுத்தியது. அப்போதில் இருந்து தற்போது வரை இயல்பு நிலை திரும்பவில்லை.

anil 1

- Advertisement -

பல பிரபலங்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். மும்பை ,சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் வசித்து வந்த பலரும் தங்களது பூர்வீகத்திற்கு திரும்பினார். அப்படித்தான் பிசிசிஐ நடுவர் அணில் சவுத்திரி தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் இருந்த டாங்க்ரோல் என்ற கிராமத்திற்குச் சென்று இருந்தார்.

அங்கு சென்ற பின்னர் தனது நண்பர்களுடன் செல்போனில் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த கிராமத்தில் முற்றிலுமாக செல்போன் டவர் கிடைக்காது. ஒவ்வொரு முறையும் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சரியான இடத்தில் நின்றுதான் பேசவேண்டும். இதன் காரணமாக விவசாய நிலத்திற்குள் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு உள்ள மரத்தில் ஏறி பேசியுள்ளார்.

anil 3

இதனை பார்த்த உள்ளூர்வாசிகள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது வைரலானது. பத்திரிக்கை செய்திகளில் வெளியானது. இதன் காரணமாக அந்த நெட்வொர்க் நிறுவனம் அந்த கிராமத்திற்கு என்று பிரத்யேகமாக ஒரு டவர் அமைத்துக் கொடுத்துள்ளது. இதன் மூலம் அந்த ஊர் மக்களுக்கும் ஆன்லைன் மூலம் படித்து வரும் மாணவர்களுக்கும் நல்லது நடந்துள்ளது அந்த கிராம மக்கள் அணில் சவுத்திரியை பாராட்டி வருகின்றனர்.

anil

மேலும் அந்த கிராம மக்கள் இதன் காரணமாக அவரது குறைகளை நேரில் அவரிடம் கூற ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர் நான் ஒரு நடுவர் தான். தலைவர் அல்ல என்று மக்களிடம் கூறி அக்கிரமத்திலேயே வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement