கொரோனா எதிரொலி : ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Cup
- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும் விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் என பல லட்சக்கணக்கில் மக்கள் கூடும் விளையாட்டுப் போட்டிகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

corona

- Advertisement -

தற்போது வரை உலகம் முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது . இவ்வாறு சென்று கொண்டிருக்க ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது ஐபிஎல் நிர்வாகம்.

மேலும் ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்படும் என்றே தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் டி20 உலக கோப்பை தொடர் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது .இந்த தொடரும் நடக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் தற்போது சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் கண்டிப்பாக டி20 உலக கோப்பை தொடரை நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ICC

இதுகுறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது: டி-20 கிரிக்கெட் தொடர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் நடக்கிறது. அதற்குள் வைரஸ் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று நினைக்கிறோம் .

- Advertisement -

அவ்வாறு கொண்டு வரப்பட்டால் கண்டிப்பாக உலக கோப்பை தொடர் நடைபெறும் . ஆனால் அதற்கு முன்னர் நடக்கவிருக்கும் ஒரு சில தொடர்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது உள்ள நிலைமையை கணக்கில் கொள்ளும்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு எந்தவித தொடரும் நடைபெறாது என்றே தெரிகிறது.

ICC

மேலும் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்குள் நிலைமை சரியாகி இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement