கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் போது செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது அந்த தடையை மீறி ஆப்பிள் வாட்ச் எனப்படும் சமார்ட் வாட்சுகளை பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்த வாட்சை போட்டியின் போது அணிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.
கிரிக்கெட் போட்டிகளின் பொது நடக்கும் சுத்தத்தை தடுக்க கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்குள் விளையாடும் போது செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தடைசெய்துள்ளது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் கூட இந்த தடை பின்பற்றிவர படுகிறது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளைய்டி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் இருக்கும் சில வீரர்கள் மைதானத்தில் தங்களது கைகளில் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்திருந்ததக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்து அவர்கள் தங்களின் செல்போனை தொடர்புகொள்ள முடியும், இதனால் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது என்று கருதி இந்த வகையான ஸ்மார்ட் வாட்சிகளை விளையாடும் போது வீரர்கள் அணிய சர்வதேச கிரிக்கெட் ஊழல் தடுப்பு வாரியம் தடை செய்துள்ளது. .