என்னல்லாம் நடக்கப்போகுதோ – டி20 உ.கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏடாகூட அம்பயர்கள், மொத்த லிஸ்ட் இதோ

Umpire
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. என்னதான் ஐபிஎல் போன்ற தொடர்கள் வந்து நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்தாலும் அதற்கு முன்னோடியாக சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் கடந்த 2007இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடருக்கு தனித்துவமான மதிப்பும் மரியாதையும் உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் நிலையில் அதற்கு போட்டியாக உலகின் நம்பர்-1 டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மெல்போர்ன், சிட்னி போன்ற பிரபல நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் பைனல் உட்பட மொத்தம் 45 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தரவரிசையில் கீழே தவிக்கும் இண்டீஸ், இலங்கை, அயர்லாந்து போன்ற அணிகள் அக்டோபர் 16இல் துவங்கும் தகுதி சுற்றில் போட்டியிட்டு சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற களமிறங்குகின்றன. அதை தொடர்ந்து இத்தொடரின் முதன்மை சுற்றாக கருதப்படும் சூப்பர் 12 சுற்று வரும் அக்டோபர் 22ஆம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியுடன் துவங்குகிறது.

- Advertisement -

ஏடாகூட அம்பயர்கள்:
அதன்பின் அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பரம எதிரிகள் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. அந்த வகையில் சூப்பர் 12 சுற்றில் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அதில் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் திருவிழாவாக பரபரப்பான திரில்லர் போட்டிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்றப் போகும் இந்த தொடரை கட்டுக் கோப்புடன் கண்காணித்து தாரசின் முள்ளாக நின்று முக்கிய நேரங்களில் நியாயமாக தீர்ப்பு வழங்க வேண்டிய அம்பயர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் மற்றும் சூப்பர் 12 சுற்று போட்டிகளை மொத்தம் 16 நடுவர்கள் நடத்துவார்கள் என்று தெரிவிக்கும் ஐசிசி அரையிறுதி மற்றும் பைனல் போட்டிகளுக்கான நடுவர்களின் [பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் இந்த பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த பிரபல அம்பயர் குமார தர்மசேனா மீண்டும் இடம் பெற்றுள்ளது ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஏனெனில் 2019 உலக கோப்பை பைனலில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு சென்றதற்காக 5 ரன்களை மட்டும் வழங்க வேண்டிய அவர் 6 ரன்களை கொடுத்து இங்கிலாந்துக்கு சாதகமாகவும் நியூசிலாந்துக்கு பாதகமாகவும் அமைந்தது. ஆனாலும் அவருக்கு ஆதரவளிக்கும் ஐசிசி தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.

அந்த ஆதரவுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரைப் பார்க்கும் ரசிகர்கள் இம்முறையும் கோப்பை இங்கிலாந்துக்கே என்றும், இம்முறையாவது நியாயமாக நடந்து கொள்ளுமாறும் கிண்டலடிக்கின்றனர். அதே போல் 2019 ஐபிஎல் தொடரில் கோட்டை தொட்டும் பஞ்சாப் அணிக்கு ஒரு ரன் வழங்கி 2022 தொடரில் ரோவ்மன் போவலுக்கு இடுப்புக்கு மேலே வீசப்பட்ட பந்தை நோ-பால் வழங்காததால் ரசிகர்களின் கிண்டல்களுக்கும் அதிருப்திக்கும் உள்ளான அம்பயர் நிதின் மேனேனும் இப்பட்டியலில் ஒரே இந்தியராக இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

நவீன டெக்னாலஜி இருந்தும் சமீப காலங்களில் இது போன்ற அம்பயர்கள் குளறுபடிகளை செய்து வரும் நிலையில் அவர்கள் தவிர ஜோயல் வில்சன் போன்ற மேலும் சில ஏடாகூட அம்பயர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளதால் இந்த உலக கோப்பையில் என்னவெல்லாம் குளறுபடிகள் நடக்கப் போகிறதோ என ரசிகர்கள் இப்போதே கலக்கம் அடைகின்றனர்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான போட்டி நடுவர்கள்: ஆண்ட்ரூ பைகார்ட், கிறிஸ் ப்ராட், டேவிட் பூன், ரஞ்சன் மடுகள்லே

கள நடுவர்கள்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், அலீம் தார், அஷன் ராஜா, கிரிஸ்டோல்பர் பிரவுன், கிறிஸ்டோல்பர் கேஃப்னி, ஜோயல் வில்சன், குமார தர்மசேனா, லாங்டன் ரூசர், மறைஸ் எரஸ்மஸ், மைக்கேல் கௌவ், நிதின் மேனன், பால் ரெய்பல், பால் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டல்போர்க், ராட் டக்கர்

Advertisement