- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலக கோப்பை 2023 : பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியிட்ட ஐசிசி – இந்தியாவின் போட்டிகள் எப்போது? விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. 1987, 1996, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடத்துவது ஸ்பெஷலாகும். அந்த வகையில் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெற்றிகரமான, ஆஸ்திரேலியா வெளியிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30 முதல் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாடும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பயிற்சி போட்டிகள்:
முன்னதாக கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களில் சில உள்ளூர் நிகழ்வுகள் நடைபெறவிருப்பதால் குறிப்பிட்ட சில போட்டிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க முடியாது என்று அந்தந்த நகர காவல்துறை அறிவித்த காரணத்தால் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட அட்டவணையில் பிசிசிஐ உதவியுடன் மாற்றங்களை செய்த ஐசிசி புதிய அட்டவணையை வெளியிட்டது. இந்நிலையில் இந்த உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் களமிறங்கும் பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத், கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 3 நகரங்களில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் இந்த பயிற்சி போட்டிகள் அனைத்து அணிகளும் இந்தியாவின் கால சூழ்நிலைகளுக்கேற்றார் போல் தங்களை உட்படுத்திக் கொள்வதற்கு உதவும் வகையில் நடைபெறுவதாக ஐசிசி கூறியுள்ளது. அதில் ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி போட்டிகளில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையின் படி ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா செப்டம்பர் 30ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெறும் தன்னுடைய முதல் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

- Advertisement -

அதே போல கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் தன்னுடைய 2வது பயிற்சி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டு இந்த உலகக் கோப்பையில் இந்தியா முழுமையாக தயாராகி களமிறங்கியுள்ளது. அந்த வகையில் உலகின் அனைத்து அணிகளும் விளையாடும் இந்த பயிற்சி போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளன. அதில் அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய உச்சகட்டமான 15 வீரர்களையும் களமிறக்கி பயிற்சிகளை எடுக்கலாம்.

2023 ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளின் அட்டவணை இதோ:
செப்டம்பர் 29 : வங்கதேசம் – இலங்கை, கௌகாத்தி.
செப்டம்பர் 29 : தென்னாபிரிக்கா – ஆப்கானிஸ்தான், திருவனந்தபுரம்
செப்டம்பர் 29 : நியூசிலாந்து – பாகிஸ்தான், ஹைதராபாத்
செப்டம்பர் 30 : இந்தியா – இங்கிலாந்து, கௌகாத்தி
செப்டம்பர் 30 : ஆஸ்திரேலியா – நெதர்லாந்து, திருவனந்தபுரம்

- Advertisement -

அக்டோபர் 2 : இங்கிலாந்து – வங்கதேசம், கௌகாத்தி
அக்டோபர் 2 : நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா, திருவனந்தபுரம்
அக்டோபர் 3 : ஆப்கானிஸ்தான் – இலங்கை, கௌகாத்தி
அக்டோபர் 3 : இந்தியா – நெதர்லாந்து, திருவனந்தபுரம்
அக்டோபர் 3 : பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா, ஹைதராபாத்

இதையும் படிங்க:கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும், 2023 உ.கோ ரோஹித் தலைமையில் இந்தியா ஜெயிக்கும் – மும்பை இந்தியன்ஸ் மாஸ் கணிப்பு

இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -