தோற்றாலும் கெத்து காட்டும் இந்திய அணி. ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியல் – விவரம் இதோ

ind-2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது இருந்தாலும் டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் அணியும் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் விராட் கோலி 886 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Ind-lose

ஸ்டீவ் முதலிடத்தில் நீடிக்கிறார் ஆஸ்திரேலிய வீரர், இளம் நட்சத்திரம் லுபுஷான் 827 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார். இந்திய வீரர்களில் புஜாரா 7ஆம் இடத்திலும் அஜிங்கிய ரஹானே 9-வது இடத்திலும் உள்ளனர் .

- Advertisement -

அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 110 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் ஆஸ்திரேலியாவில் 108 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர் .

Kohli-2

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும் நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். தரவரிசைப் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே முதல் பத்து இடத்தில் உள்ளார். அவர் 7வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் முதல் 10 இடத்தில் இருந்து வெளியேறி உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவர்கூட முதல் 10 இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement