டி20 போட்டியில் முதல் 10 இடத்துல கூட கோலி இல்லையா ? – வெளியான புதிய டி20 ரேங்கிங்

kohli1
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

kohli

நடந்து முடிந்த இந்த டி20 தொடரில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. மேலும் இந்த தொடரில் இரண்டாவது போட்டியில் கோலி 72 ரன்கள் குவித்தார். மேலும் தவான் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் 40 மற்றும் 36 என ரன்கள் அடித்தார். இதன் மூலம் கோலி மற்றும் தவான் ஆகியோர் டி20 ரேங்கில் தற்போது முன்னேறியுள்ளனர்.

- Advertisement -

அதன்படி தற்போது ஐ.சி.சி வெளியிட்ட புதிய டி20 போட்டிகளின் ரேங்கிங் பட்டியலில் இந்திய அணி சார்பாக கேப்டன் விராத் கோலி ஒரு இடம் முன்னேறி 11வது இடத்திலும், ஷிகர் தவான் மூன்று இடங்கள் முன்னேறி 13வது இடத்திலும் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement