ஒரு டீமுக்கு 9 பேர் போதும். வேணும்னா 2 கோச் வந்து விளையாடட்டும் – ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய விதிமுறை

Worldcup
- Advertisement -

ஆடவர் கிரிக்கெட்டுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக கோப்பையை கடந்த பல வருடங்களாக ஐசிசி நடத்தி வருகிறது. இதுவரை வரலாற்றில் 11 மகளிர் உலகக் கோப்பைகள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த வருடம் 12வது முறையாக நடைபெறும் ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது.

womens

- Advertisement -

வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் நியூசிலாந்தில் கோலாகலமாக துவங்கும் இந்த உலககோப்பை வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் உள்ளன.

கோப்பையை வெல்லுமா இந்தியா:
இதுவரை நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைகளில் இந்திய அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதே கிடையாது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்ற மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக பரிதாப தோல்வி அடைந்து வெறும் கையுடன் நாடு திரும்பியது.

indianwomescricket

அதன்பின் தற்போது நடைபெறும் இந்த உலக கோப்பையில் பங்கேற்பதற்காக மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த உலகக் கோப்பைக்கு தயாராக நியூசிலாந்து நாட்டு கால சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள ஏதுவாக கடந்த மாதமே அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி அங்கு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆனால் அந்த தொடரில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் பரிதாப தோல்வி அடைந்துள்ளதால் விரைவில் அதே நியூசிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையை இந்தியாவால் வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

9 பேர் போதும்:
இந்நிலையில் விரைவில் துவங்க உள்ள மகளிர் உலகக்கோப்பை 2022 தொடருக்கு முன்பாக ஒரு சில புதிய போட்டி விதி முறைகளை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

1. 9 பேர் போதும்: அதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக ஒரு அணியில் உள்ள வீராங்கனைகள் திடீரென கரோனோ காரணமாக தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இக்கட்டான சூழ்நிலையில் நடக்கும் போட்டியின் போது வெறும் 9 வீரர்களுடன் அந்த அணி களமிறங்க ஐசிசி அனுமதித்துள்ளது. அதே சமயம் எஞ்சிய 2 வீராங்கனைகளுக்கு பதிலாக அந்த அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்து இருவர் களத்தில் விளையாடலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது. ஆனால் அந்த 2 பேருக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடையாது என்றும் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீப காலங்களாக கரோனா பிரச்சனை காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட பல தொடர்கள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதை பார்த்துள்ளோம். எனவே அது போன்றதொரு இக்கட்டான நிலைமை இந்த மகளிர் உலகக் கோப்பையில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஐசிசி இந்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இதே காரணத்திற்காக இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் இடம்பெறும் வீராங்கனைகளின் அளவை 15ஆக ஐசிசி உயர்த்தியுள்ளது. மேலும் இது போன்ற விதிமுறை ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2022 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையில் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

IND-Womens

2. சூப்பர் ஓவர்கள்: இது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான போட்டி டையில் முடிந்தால் அதன் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும். ஒரு வேளை அந்த சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டி டையில் முடிந்ததால் கொண்டுவரப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிய இறுதியில் அதிக பவுண்டரிகளை அடித்த அணிக்கு உலக கோப்பை என்ற முட்டாள்தனமான விதிமுறைப்படி இங்கிலாந்துக்கு 2019 உலக கோப்பையை ஐசிசி ஒருதலைப்பட்சமாக பரிசளித்தது. எனவே அதுபோன்றதொரு நிலைமை மீண்டும் நிகழாமல் இருப்பதற்காகவே இந்த புதிய விதிமுறையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது.

Advertisement