ஐ.சி.சி வெளியிட்ட புதிய ஒருநாள் தரவரிசை பட்டியல். அசத்திய கோலி, ரோஹித் ஜோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

india

ஒருநாள் தொடருக்கான ஐசிசி தரவரிசை பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடருக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டு சில தினங்களில் இந்த பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Kohli

துணை கேப்டன் ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம், நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர், ஐந்தாவது இடத்தில் தென்னாபிரிக்காவின் முன்னாள் கேப்டன் டூப்லஸ்ஸிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் கான தரவரிசைப் பட்டியலில் முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நியூசிலாந்து. அணியின் வீரர் டிரென்ட் போல்ட் முதலிடத்திலும் ,மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முஜிபூர் ரகுமான் இடத்தில் உள்ளார்.

boult 1

நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், 5 ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆகியோர் இருக்கின்றனர்.
ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்தியாவின் ரவீந்தர் ஜடேஜா மட்டுமே இருக்கிறார் அவரும் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

Nabi-2

ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் முஹம்மது நபி மற்றும் இரண்டாவது இடத்தில் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உள்ளனர். ஒருநாள் புள்ளிபட்டியலில் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.