- Advertisement -
உலக கிரிக்கெட்

2024 டி20 உலககோப்பை தொடருக்கான கனவு அணியை வெளியிட்ட ஐ.சி.சி – பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று முடிந்த நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற வேளையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு சென்றன. இந்த இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இந்த தொடரில் பல்வேறு வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்ததோடு ஒரு சில அணிகளின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து சிறந்த 11 பேர் கொண்ட உலக கோப்பை அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது. அப்படி அறிவிக்கப்பட்ட அணி இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய தென்னாப்பிரிக்க அணியில் இருந்து ஒரு வீரர் கூட அந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

அதேபோன்று இந்த அணியில் 6 இந்திய வீரர்களும் 3 ஆப்கானிஸ்தான் வீரர்களும், ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரரும், ஒரு ஆஸ்திரேலிய வீரர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஐசிசி தேர்வு செய்துள்ள இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். அவருடன் இணைந்து துவக்க வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கலஸ் பூரான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ஸ்டாய்னிஸ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேல் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

மீதமுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பசல் பரூக்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வினை ஐசிசி அறிவித்திருந்த போதிலும் இது ஒரு நியாயமற்ற தேர்வு எனவும் தென்னாப்பிரிக்க வீரர்களை இழிவு படுத்துவது போல் உள்ளது என்றும் சில ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதன்படி ஐசிசி தேர்வு செய்துள்ள 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 பிளேயிங் லெவன் இதோ:

இதையும் படிங்க : தெ.ஆ அணியை மடக்க ரிஷப் பண்ட் வெச்சு இந்தியா செய்த மாஸ்டர்பிளான்.. நேரலையில் பாராட்டிய ரவி சாஸ்திரி

1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) ரஹ்மனுல்லா குர்பாஸ், 3) நிக்கோலஸ் பூரான், 4) சூரியகுமார் யாதவ், 5) மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) ரஷீத் கான், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அர்ஷ்தீப் சிங், 11) பசல்ஹக் பரூக்கி.

- Advertisement -