உங்க காலம் போயாச்சு. நீங்க ரிட்டயர்டு ஆய்டுங்க இந்திய அணியின் முன்னணி வீரருக்கு அட்வைஸ் கொடுத்த – நியூசி வீரர்

Ian-smith
- Advertisement -

2019ஆம் ஆண்டு இந்திய அணி செமி பைனல் போட்டியுடன் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்த போட்டியின் போது தோனி ரன் அவுட் ஆனார். அந்த ரன் அவுட்டின் போது மைதானத்தின் டக் அவுட்டில் உட்கார்ந்து கொண்டு தொண்டை கிழிய ஆரவாரத்துடனும் ஆச்சரியத்துடனும் அதனை வர்ணனை செய்து கொண்டிருந்தவர் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் இயான் ஸ்மித்.

Dhoni-2

- Advertisement -

இவர் இதுபோன்ற கிரிக்கெட்டின் பல முக்கியமான தருணங்களில் இருந்து வர்ணனை செய்து தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இதுபற்றி கிட்டதட்ட ஒரு ஆண்டுகாலம் கழித்து பேசியுள்ளார்.

இது குறித்து ஸ்மித் கூறியதாவது : தோனியை கிரிக்கெட் உலகில் மிஸ் செய்யாமல் எப்படி இருக்க முடியும். அவர் ஒரு சிறந்த தலைவர் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஆட்டக்காரர். உலக கோப்பை தொடரில் கிட்டத்தட்ட இந்திய அணிக்கு கோப்பை பெற்று தரும் அளவிற்கு சென்றவர் அவரைப் பற்றி வர்ணனை செய்வது மிகவும் பிடிக்கும்.

Dhoni

காலம் சுழலத் தான் செய்யும் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும என்பதை நாம் உணர வேண்டும் இவ்வாறு பேசியுள்ளார் இயான் ஸ்மித். 13வது ஐபிஎல் போட்டி தொடருக்காக தற்போது தோனி தனது பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement