- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடர் நிறுத்தப்பட்டதால் பி.சி.சி.ஐ க்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. அடுத்த தொடரும் கேன்சல் தான் – எச்சரித்த இயான் சேப்பல்

இந்தியாவில் கடும் கட்டுப்பாடுகள் உடன் பயோ பபுள் மூலம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எப்படியோ வீரர்களுக்கு இடையே கொரோனா பரவல் ஏற்பட தற்போது இந்த 14வது ஐபிஎல் சீசனை பிசிசிஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் காலவரையறையின்றி இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த பி.சி.சி.ஐ வெளிநாட்டு வீரர்களையும் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேற்றி உள்ளது. அதனால் இந்த தொடரானது எப்பொழுது நடைபெறும் என்ற தகவல் உறுதியாக இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் செப்டம்பர் மாதம் இந்த தொடர் நடைபெறும் என்றும் அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரை தொடர்ந்து ஐசிசி நடத்தவிருந்த டி20 உலகக் கோப்பையையும் இந்தியாவில் பிசிசிஐ-யால் நடத்த முடியாது என்ற ஒரு கருத்தினை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் பெருகி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரை பிசிசிஐ பாதியிலேயே ஒத்திவைத்துள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் நிலைமையை பார்த்தால் நிச்சயம் அவர்களால் இந்த ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது அதே போன்று இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் நவம்பர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையையும் அவர்களால் திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்த முடியாது.

ஒருவேளை அந்த தொடரானது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படலாம் என்று சேப்பல் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடர் இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் நடந்தும் தற்போது தொற்று பரவியதன் காரணமாக இந்த தொடரை பி.சி.சி.ஐ நிறுத்தியுள்ளது இதன்காரணமாக நிச்சயம் அடுத்ததாக டி-20 தொடரை இந்தியாவில் நடந்த யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனவே நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரானது வேறு ஒரு நாட்டில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனது போன்று டி20 உலகக் கோப்பையையும் அவர்களால் நடத்த முடியாமல் போனாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by