இவர் இல்லாமல் இந்திய அணிக்கு எப்போதும் வெற்றி கிடையாது. பளீர் பேட்டி அளித்த – ஆஸி வீரர்

Chappell
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியது. இதில் டி20 போட்டிகளில் 5 போட்டியிலும் வெற்றி பெற்று அபார சாதனை படைத்தது. அதன் பின்னர் ஒருநாள் போட்டித் தொடரில் ரோகித் சர்மா ஆட முடியாமல் காயம் காரணமாக வெளியேறினார்.

Ind-lose

- Advertisement -

ரோஹித் சர்மா அணியில் இருந்து வெளியேறியதிலிருந்து இந்திய அணி நியூசிலாந்தில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. ஒருநாள் தொடரின் மூன்று போட்டியிலும் தோல்வி, டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டியிலும் தோல்வி, இதுவே மிஞ்சியது. இரண்டு தொடரிலும் ரோகித் சர்மா இல்லை. இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சேப்பல் ரோகித்சர்மா இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ரோகித் சர்மா இந்திய அணியிலிருந்து வெளியேறியதிலிருந்து இந்திய அணி வெற்றி பெறவே இல்லை. இது ஒரு தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா இல்லாததால் ஒரு போட்டியில் கூட ஜெயிக்கவில்லை. ரோஹித் சர்மாவை ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணி இழந்ததை விட விராட் கோலிக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார் என்பது தான் முக்கியம்.

Rohith-4

இதுவே அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு ஆலோசனை வழங்க துணையாக இருந்தார். அவர் இல்லாததால் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது . ரோகித் சர்மா இந்திய அணியில் இல்லை எனில் இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம் இவ்வாறு தெரிவித்துள்ளார் இயான் சப்பல்.

Advertisement