அவங்களுக்கு யாரும் இதை சொல்லி தரல.. அதனால் தான் அவங்க தோத்தாங்க – இங்கி அணியை விளாசிய இயான் சேப்பல்

Chappell
- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தின் தரம் குறித்து இங்கிலாந்து வீரர்களும், சில முன்னாள் இந்திய வீரர்களும் விமர்சித்தும் குற்றச்சாட்டு கூறி வந்த வண்ணமும் இருக்கின்றனர். இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் இயான் சேப்பல் இந்திய அணிக்கு ஆதரவு தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் வைத்து நடந்த முதல் இரண்டு போட்டிகளிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் திறமையை இந்திய அணி அறிந்துகொண்டது.

- Advertisement -

ஸ்பின்னில் சரியாக ஆட தெரியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறியதை கருத்தில் காெண்டே அகமதாபாத்துக்கு 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.கணித்தது போல வந்த அனைவரும் ஸ்பின் பந்துகளை டிஃபென்ஸ் செய்ய தெரியாமல் பெவிலியன் நோக்கி போன வண்ணம் இருந்தனர். மேலும் பேசிய அவர் இங்கிலாந்து வீரர்களுக்குத் தெரிந்தது எல்லாமே ரிவர்ஸ் ஸ்வீப்பில் விளையாடுவது, அல்லது கிரீஸை விட்டு இறங்கிவந்து அடித்து பந்துவீச்சாளர்களின் லென்த்தை மாற்றி விளையாடுவது, இதைத் தவிர வேறு ஒன்றும அவர்களுக்கு தெரியவில்லை.

ஸ்பின் பந்துகளை எப்படி கணித்து ஆட வேண்டும் என்று அவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து வீரர்களுக்கு முறையான ஃபூட் வொர்க் சொல்லி கொடுக்கவில்லை.இவர்கள் சரியான ஃபூட் வொர்க் ஆட தெரியாதலாலேயே அவசரமாக பந்தை மேற்கொண்டு எல்பிடபள்யூ ஆனார்கள்.பேர்ஸ்டோ போன்ற ஒரு முன்னனி வீரருக்கே ஃபூட் வொர்க் ஆட தெரியவில்லை , விளைவாக பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.

axar

நான் சிறுவயதில் இருந்தபோது ஃபுட் வொர்க் குறித்து எனக்கு இரு விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. முதலாவதாக 3 அடி தொலைவில்தான் ஸ்டெம்பிங் ஆக வேண்டும் 3 இன்ச்சில் அல்ல. இரண்டாவதாக கிரீஸை விட்டு வெளியேற நினைத்துவிட்டால் , விக்கெட் கீப்பரை பற்றி ஒருபோதும் சிந்திக்கக்கூடாது.இதில் எதுவுமே இங்கிலாந்து வீரர்களுக்கு தெரிந்ததாக படவில்லை.

ind

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இங்கிலாந்து அணியே தான் காரணம்.பிட்சை குறை கூறி ஒன்றும் ஆகிவிட போவதில்லை.இந்த விஷயத்தில் சரியான வியூகத்துடன் ஆடி வெற்றியடைந்த இந்திய அணியையே நான் பாராட்ட செய்வேன் என்று கூறியுள்ளார்.

Advertisement