இந்திய அணி இவர் இல்லாமல் நிறைய கஷ்டப்படும். பிரச்சனை அதிகரிக்கும் – இயான் சேப்பல் எச்சரிக்கை

Chappell
- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து ஜனவரி இறுதி வரை 4 டெஸ்ட் போட்டிகளில் நடைபெறும். இதற்கு முன்னதாகவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முடிவடைந்திருக்கும்/

INDvsAUS

- Advertisement -

இந்த தொடரின் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாடுவார் கடைசி மூன்று போட்டிகளில் ஆட மாட்டேன் என்றும் அறிவித்துவிட்டார். ஏனெனில் அவருக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது. அதற்காக இந்தியா திரும்ப இருக்கிறார்.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல் கோலி இந்திய அணியில் இல்லாதது பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்..

Kohli 4

இந்திய அணி இந்த முறை மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 14 நாட்களில் இந்திய வீரர்கள் தனிமையில் இருக்கிறார்கள். அது ஆஸ்திரேலிய சூழ்நிலையை அவர்களுக்கு பழக்கப்படுத்தி கொள்வதை கொடுத்துவிடும். விராட்கோலி இந்தியாவிற்கு திரும்பிய உடன் இந்திய அணியில் மாற்றம் இருக்கும். அந்த நேரத்தில் இந்திய அணியில் பெரிய பிரச்சினைகள் உருவாகும்.

Kohli

விராட் கோலி இல்லாத இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலிமையிழந்து இருக்கும். இந்த நேரத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு சற்று கடினம் தான். அதனை ஆஸ்திரேலிய அணி உபயோகித்துக்கொள்ளலாம். விராட் கோலி இல்லாத நேரத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இயான் சேப்பல்.

Advertisement