இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது. இரு அணிகளுக்குமே இது முக்கியம் வாய்ந்தத தொடராகும். ஏனெனில் கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 71 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து இருந்தது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக இம்முறை ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தும் முன்புறத்தில் உள்ளது.
இந்த தொடரில் இரு அணிகளிலுமே சில முக்கிய டெஸ்ட் வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் முதல் போட்டியில் விளையாட முடியாது என்று கூறப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டி முடிந்து விராட் கோலி நாடு திரும்புவது மீதமுள்ள மூன்று போட்டிகளில் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் முதல் போட்டியின் போது பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் கட்டாயம் விளையாடுவார்கள் என்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான போட்டியில் சைனி, சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயன் சாப்பல் தன்னுடன் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மது அருந்தியதாக அப்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் யார் என்ற திட்டம் குறித்து தன்னிடம் கூறிவிட்டதாகவும் பகீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : நானும் ரவி சாஸ்திரியும் மது அருந்தி கொண்டிருக்கும் போது அவர் இந்திய அணியின் 3-வது வேகப்பந்துவீச்சாளர் இடத்திற்கு உமேஷ் யாதவை தான் தேர்வு செய்யப் போகிறோம் என்று கூறிவிட்டார். இந்த போட்டியில் சிராஜ், சைனி ஆகியோர் இருந்தாலும் கடந்த கால அனுபவத்தை வைத்து உமேஷ் யாதவ் நாங்கள் களமிறங்கப் போவதாக ரவிசாஸ்திரி கூறியதாக இயான் சேப்பல் கூறியுள்ளார்.
அவர் மேலும் கோலிக்கு பதிலாக மீதமுள்ள மூன்று டெஸ்டுகளில் ரஹானே கேப்டனாக செயல்படுவது இந்திய அணிக்கு அணுகுலம் தான். ஏனெனில் அவரது கேப்டன்ஷிப்பை நான் 2017 ஆம் ஆண்டு நேரில் கண்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் உமேஷ் யாதவ் 2017 ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி ஏற்கனவே நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் முதன்மை தேர்வாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவது பவுலர் குறித்து ரவி சாஸ்திரி உளறியதை இந்திய ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.